(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"நித்யா முன்னாடி நீ அண்ணியை அப்படி பேசி இருக்க கூடாது" -பரத்

"அவ பண்ணுனது தப்பு. அதை தப்புனு சொன்னதுல என்ன இருக்கு? நித்யா யாரும் வெளி ஆள் இல்லையே...நம்மபேமிலி தான?" -ராம்

"அண்ணா, நீ என்னை விட வயசுல பெரியவன். இதை நான் சொல்லலாமான்னு தெரியல... ஆனாலும் சொல்லாம இருக்கமுடியலை. நித்யா நம்ம கூட ஒண்ணா வளர்ந்தவ தான். ஆனா நீ அண்ணியையும் புரிஞ்சுக்கணும். ஒவ்வொரு முறையும் நீயும் நித்யாவும் ஒண்ணா போகும்போதும் வரும்போதும் அண்ணி முகம் ரொம்பவே வாடி போகுது. அப்படி இருக்கும் போது நீ அவ முன்னாடியே அண்ணியை திட்டி இருக்க... அண்ணி பொறுப்பில்லாம எதையும் செய்ய மாட்டாங்கன்னு உனக்கே தெரியும். ஏதோ தெரியாம நடந்துருக்கும். அதுக்கு இப்படி நீ ரியாக்ட் பண்ணிருக்க வேணாம். நீ பேசும்போது அண்ணி முகத்தை நீ பார்க்கலை. பாவம்ணா. அவங்க அபப்டி தப்பே பண்ணிருந்தாலும் அவங்க மனநிலையை யோசிச்சு நீ இன்னைக்கு திட்டி இருக்க கூடாது" பரத் சொல்லவும் சில நொடிகள் மௌனம் காத்த ராம், "இன்னைக்கு திட்டுனா என்ன?" அவளுக்கு எதுவும் இன்றைக்கு பிறந்தநாளோ என்று யோசித்தபடி ராம் கேட்க, இந்த முறை பரத் ராமை பார்த்த பார்வையில் அதிர்ச்சி இருந்தது.

"அண்ணா, உண்மையா நீ அண்ணியை விரும்பி தான் கட்டிகிட்டியா??" அவனுடைய கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்த ராம் பரத்தை பார்க்க, "அண்ணா...உண்மைய சொல்லு. நீ அண்ணியை விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" மீண்டும் அதே கேள்வியை கேட்டான் பரத்.

ராமிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவும் இருக்கையில் எழுந்த பரத் "அண்ணா நீ அண்ணியை உண்மையாவே விருப்பத்துடன் கல்யாணம் பண்ணிருந்தா இன்னைக்கு என்ன நாள்னு உனக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்கும். அப்படி தெரிஞ்சுருஞ்சா அண்ணியை பத்தியும் தெரிஞ்சிருக்கும். அண்ணியை பத்தி தெரிஞ்சிருந்தா நீ இப்படி எல்லாம் நடந்துருக்க மாட்ட. சோ உனக்கு அண்ணியை பத்தி எதுவுமே தெரியல...இன்னும் லேட்டாகல. அண்ணியை மிஸ் பண்ணிடாத...ரொம்ப வருத்தப்படுவ..."என்றவன் அங்கிருந்து வேகமாக வெளியேற, அவன் சொன்னதை எல்லாம் கிரகித்து கொள்ளவே சில நொடிகள் தேவை பட்டது ராம்க்கு.

"இன்னைக்கு என்ன நாள்???" யோசனையுடன் அமர்ந்தான் ராம்.

ராமிடம் பேச அவனது அறைக்கு சென்ற நித்யா, பரத் பேசியதை எல்லாம் நின்று கேட்டவளுக்கு ராமிற்கும் தமிழ்செல்விக்கும் இடையில் இருக்கும் இடைவெளி பெரியது என புரிந்தது. தன்னுடைய கையில் இருந்த அந்த கறைபடிந்த காகிதத்தை பார்த்தாள். அதனால் தனக்கு உபயோகமான ஒரு தகவல் கிடைத்திருக்கிறது என்று எண்ணியவள் முகத்தில் புன்னகை படர்ந்தது.

"சார் இதுல ஒரு சைன் போடணும்" என்றபடி உள்ளே வந்த கீர்த்தியின் கையில் இருந்த பைலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.