(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அவன் கண்கள் மூடி இருந்தது. எதுவும் பேசாமல் கண்களை மூடியவள் சீக்கிரமே உறங்கி போக, மெல்ல கண்களை திறந்து அவளை பார்த்தான் ராம். அவளின் சீரான மூச்சு அவள் உறங்கிவிட்டதை சொல்ல, அவள் புறம் திரும்பி படுத்தான்.

அவளின் முகத்தையே பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு உறக்கம் வரவில்லை. முதன்முதலாக ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளை கோவையில் நடந்த இன்டர் காலேஜ் காம்பெடிஷனில் பார்த்தது நினைவிற்கு வந்தது. அவனையும் அறியாமல் அவன் முகத்தில் புன்னகை பூத்தது.

இவனுடைய கல்லூரியின் சார்பில் இவன் உள்பட முப்பது பேர் கொண்ட குழு அங்கு போயிருந்தது. அங்கு தான் அவன் முதல் முதலாக தமிழை பார்த்தது.

"பி எஸ் ஆர் குழுமம்" என பொறிக்கப்பட்டிருந்த அந்த வளாகத்தின் வாயிலில் வந்து நின்றது அந்த பேருந்து. அதில் இறங்கிய மாணவர்கள் எல்லாம் அந்த வளாகத்தை வியந்து பார்த்தனர். அந்த ஒரு வளாகத்திற்குள்ளாகவே பொறியியல், மருத்துவம் மற்றும் கலை கல்லூரிகள் இருந்தது.பல கல்லூரி மாணவர்களின் வருகையால் அந்த இடமே ஜெகஜோதியாக இருந்தது.

"டேய்ய்ய்....வாவ்....செம்மையா இருக்குடா. சென்னைல நம்ம காலேஜ் தான் பெருசுனு நெனைச்சா இதை பாரு." பேருந்தில் இறங்கிய ராம், தன்னுடைய நண்பர்களின் பேச்சை கேட்டபடி உள்ளே நடந்தான்.

"ராம் ஈவினிங் தான பங்க்ஷன். இப்போவே இங்க வந்து என்ன பண்றது???" ஒருவன் கேட்க, "எனக்கு ஈவினிங் காம்பெடிஷன்க்கு ஸ்டேஜ் அரேஞ்சமென்ட்ஸ் எல்லாம் செக் பண்ணனும். நீங்க வேணா வெளிய ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க" என ராம் சொல்ல, "சூப்பர் மச்சி...தேங்க்ஸ்..." என அவர்கள் அங்கிருந்து கிளம்ப, அங்கிருந்த செக்கியூரிட்டியிடம் ஆடிட்டோரியம் எங்கிருக்கிறது என கேட்டவனை செக்யூரிட்டி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களை காட்டி, "தம்பி இந்த சைக்கிளை எடுத்துட்டு போ. நடந்து போக முடியாது. ஸ்டுடென்ட்ஸ் யூஸ் பண்ண தான் மேனேஜ்மேண்ட் இந்த சைக்கிளை எல்லாம் நிறுத்தி இருக்கு" எனவும் அங்கிருந்த ஒரு சைக்கிளை எடுத்து கொண்டு அவர் சொன்ன திசையில் சென்றான் ராம்.

அந்த கல்லூரி வளாகத்தை வேடிக்கை பார்த்து கொண்டே வந்து சைக்கிளை திரும்பியவன் எதிரே வந்த சைக்கிளை கவனிக்க வில்லை. இரண்டு சைக்கிள்களும் மோதி கீழே விழ "ஐயோ தமிழ் என்னாச்சு???" என்ற குரலில் கீழே விழுந்திருந்த ராம், நிமிர்ந்து பார்க்க, "ஒன்னும் இல்லை " என்றபடி கையில் இருந்த மண்ணை துடைத்து கொன்றிருந்தவள் கண்ணில் பட்டாள்.

அந்த காலை நேர இளம் வெயில் அவளின் மேல் பட, வெள்ளை நிற சுடிதாரில் தேவதையை போல நின்றிருந்தவளை கண்ணை அமைக்கவும் மறந்து பார்த்து கொண்டிருந்தான் ராம்.

"அய்யோ வைட் சுடிதார் எல்லாம் மண்ணாயிடுச்சே" அவளுடன் வந்த அந்த கல்லூரி மாணவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.