"நெற்றியில் ஈர துணியால துடைச்சு விட சொன்னாங்க பாட்டி. அதான்" அவளின் அகன்ற விழிகளில் தெரிந்த வியப்பை கவனித்தவாறு சொன்னான் ராம். அப்போது தான் அவனுடைய கையை பற்றியிருப்பதை உணர்ந்த தமிழ், தன்னுடைய கையை விளக்கி கொண்டாள்.
மெல்ல எழுந்து அமர முயன்றவளை எழுப்பி பின்னால் ஒரு தலையணையை வைத்து சாய்ந்து அமர வைத்தவன் அங்கிருந்த தெர்மாமீட்டரை எடுத்து அவளின் வாயருகே கொண்டு செல்ல, அவளின் தலை தன்னிச்சையாக பின்னால் நகர்ந்தது.
"டெம்பெரேச்சர் செக் பண்ணனும்" என்றவன் அதை அவளின் வாயில் வைத்தான்.
"இப்போ பீவர் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இந்த கஞ்சியை குடிச்சிட்டு டேப்லேட்ஸ் போட்டுக்கோ" என்றவன் ஒரு டம்பளரில் சிறிது சிறிதாக கஞ்சியை ஆற வைத்து அவளிடம் நீட்ட, தயக்கத்துடனே வாங்கி அதை குடித்தவள் அவன் கொடுத்த மாத்திரைகளை வாங்கி போட்டு கொண்டாள்.
"ம...மணி என்னாச்சு?" வெளியே இருட்டி இருப்பதை உணர்ந்து தமிழ் கேட்க, "பதினொன்னு" அவளுக்கு பதில் சொன்னபடி அவள் குடித்த கஞ்சியின் பாத்திரங்களை எல்லா மெடுத்து வைத்து கொண்டிருந்த ராமை ஆச்சர்யமாக பார்த்தாள்.
தான் மெத்தையில் படுத்திருப்பதை உணர்ந்தவள் அவனுக்கு உறங்க நேரமாவதை உணர்ந்து அங்கிருந்து எழ முயல, மீண்டும் தலையை சுற்றுவதை போல இருக்கவும் தடுமாறியவளை தாங்கி பிடித்தவன், "என்ன வேணும்??? ரெஸ்ட் ரூம் போகணுமா???" எனவும் "இ...இல்ல...நான் சோபால படுத்துக்கறேன்" என்றவளை அப்படியே மெத்தையில் அமர்த்தியவன் தலையணையை நேராக வைத்து "படு " எனவும் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தமிழ்.
"இங்கயே படுனு சொன்னேன்" அவன் மீண்டும் அழுத்தி சொல்ல, "இல்லை நான் சோபால படுத்துக்கறேன்" என்றவளை பார்த்தவன் "சரி சோபால படுத்துக்கோ. ஆனா நான் தூக்கிட்டு வந்து இங்க படுக்க வெச்சிடுவேன். நான் தூக்கிட்டு வரணும்னு உனக்கு ஆசையா இருந்தா அங்க போயி படுத்துக்கோ" என்றபடி அவன் அருகே நிற்க,"இ...இல்லை இங்கயே படுத்துக்கறேன்" என்றபடி மெத்தையில் படுத்த தமிழ், "அந்த சோபா சின்னதா இருக்கு. உங்க ஹைட்டுக்கு அது பத்தாது" என்றாள் நின்றுகொண்டிருந்தவனை பார்த்தபடி.
"ஆமாம் ஆனா நான் சோபால படுக்கறனேனு எப்போ சொன்னேன்" என்றவன் மறுமுனையில் வந்து மெத்தையில் படுக்க அவள் அவனை திருதிருவென விழித்தபடி பார்த்தாள்.
அவள் புறம் திரும்பியவன், "உனக்கு பீவர். நீ பக்கத்துல இருந்தா என்னால அப்பப்போ எழுந்து பார்த்துக்க முடியும். இல்லைனா நீ தூக்கத்துல கீழ விழுந்தா கூட தெரியாது. அதனால இங்க படு" என்றவன் அங்கிருந்த போர்வையால் அவளுக்கு போர்த்தியவன் விளக்கை அணைத்துவிட்டு படுக்கவும், அவனின் நடவடிக்கைகள் எல்லாம் புதிதாக இருக்க அவனை திரும்பி பார்த்தாள் தமிழ்.