(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

வாங்கியவன், அதில் கையெழுத்திட்டு அவளிடம் நீட்டினான்.

"தமிழ்..." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவநை நிறுத்தியது கீர்த்தியின் கேள்வி.

"சார் மேம் பீவரா இருக்குனு கிளம்பி போனாங்களே? இப்போ எப்படி இருக்காங்க???" அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என விழித்தவன் "அ ...அது...வீட்டுக்கு போயிட்டா...தூங்கிட்டு இருக்கா" எனவும் "ஓ...ஓகே சார்" என கீர்த்தி வெளியேற, "பீவரா? வீட்டுக்கு போயிட்டாளா? ஒரு வார்த்தை சொன்னாளா???" என்று முணுமுணுத்தவன் தன்னுடைய செல்பேசியில் அவளின் எண்ணை அழுத்த அது ஒருமுறை அடித்து ஓய்ந்தது. மீண்டும் ஒருமுறை முயற்சித்தவன் பின் விசாலத்தை அழைத்தான்.

"பாட்டி..." ராமின் குரலை கேட்ட விசாலம், "ஏண்டா அறிவே இல்லையா உனக்கு? அவளுக்கு பீவெர்னா அப்படியே அனுப்பிடுவியா? நீ கொண்டு வந்து விடமாட்டியா??? அப்படி என்ன வெட்டி முறிக்கிற அங்க? அவளை விட எதுவும் முக்கியம் இல்லை...அவ வந்து நின்ன கோலத்தை பார்த்து எனக்கு உயிரே போயிடுச்சு...எப்படிடா அவளை தனியா அனுப்ப மனசு வந்துச்சு???" திட்டி தீர்த்தவருக்கு பதில் சொல்லமுடியவில்லை அவனால்.

"என்ன வேலை இருந்தாலும் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வீட்டுக்கு வந்து அவ பக்கத்துல இரு" என்றவர் அவனின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தார்.

"அவ்வளவு மோசமாவா வீட்டுக்கு போனா??" யோசனையுடன் அமர்ந்தான் ராம்.

வீட்டு போர்டிகோவில் காரை நிறுத்தும்போதே அங்கு நின்றிருந்த அசோக்கின் காரை பார்த்தான் ராம். யோசனையுடன் உள்ளே நுழைந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த விசாலத்திடம் சென்றான்.

"பாட்டி..." அவனது அழைப்பில் நிமிர்ந்தவர், "வந்துட்டியா??? போ மேல அசோக் பார்த்துட்டு இருக்கான். போயி பாரு" எனவும் மேலே செல்ல நகர்ந்தவனை நிறுத்தியவர், "எனக்கு இன்னைக்கு என்ன நாள்னு தெரியல. தெரிஞ்சிருந்தா அவளை ஆபீஸ்க்கு அனுப்பிருக்கவே மாட்டேன். இப்போ தான் அவ அம்மா சொன்னா. உனக்கும் மறந்துடுச்சா? சரி பரவால்ல. அவ மனசுல இருக்கற வருத்தம் தான் அவளை படுக்க வெச்சிருச்சுச்சு. போ போயி பாரு" என்றவர் ஒரு பெருமூச்சுடன் அமரவும் "என்ன நாள்????யாரிடம் கேட்பது" என்ற யோசனையுடன் மேலே வந்தவன் அவர்கள் அறைக்கு அருகே வரவும் உள்ளே அசோக் தமிழ்செல்வியிடம் பேசுவது கேட்கவும் அப்படியே நின்றான்.

"இவ்ளோ பீவர் வர அளவுக்கு என்ன பண்ணுன? கண்ணெல்லாம் ஏன் இப்படி இருக்கு????" அசோக்கின் கேள்விக்கு மெலிதாக புன்னகைத்தாள் தமிழ்.

"சிரிச்சா கேள்வி கேட்கமாட்டேனு நெனைக்கிறியா?? அழுதியா தமிழ்??? உண்மையை சொல்லு" அசோக் கேட்க, அவள் என்ன பதில் சொல்கிறாள் என தெரிந்து கொள்ள ராமும் தன்னுடைய காதுகளை தீட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.