(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கண்டதும் இது கடவுள் அவனுக்கு கொடுத்த வாய்ப்பு, தவற விடக்கூடாது என்று முடிவெடுத்தவன் வந்து எடுத்து கொள்வதாக சொல்லி அந்த ஸ்னாக்சை எல்லாம் அங்கேயே வைத்து விட்டு காபி ஷாப்பை நோக்கி ஓடினான். அவன் உள்ளே நுழையும் போது அவளுடன் வேறு ஒருவன் அமர்ந்திருந்தான். அவனின் கையில் இருந்த பூங்கோத்தை கண்ட ராமின் இருதயம் ஒருமுறை நின்றே போனது எனலாம்.

"ஒரு வேளை அவளுக்கு ஏற்கனவே காதலன் இருப்பானோ???" என்ற எண்ணம் தோன்ற அதுவே அவனுக்கு ஜீரணிக்க முடியாததாக இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். எதையும் நாமாக நினைத்துகொள்ள கூடாது என்று எண்ணியவன் அவர்களின் டேபிளுக்கு அருகே இருந்த மற்றொரு டேபிளில் அவர்களுக்கு முதுகை காட்டியாப்டி அமர்ந்தான்.

"ஏன் தமிழ் அப்போ பணம் தான் முக்கியமா?? நான் உன்னை உண்மையா லவ் பண்றேன் அந்த அன்பு உனக்கு தெரியலையா?" அந்த ஒருவன் அவளிடம் கேட்டான்.

"இப்போ வேணா இந்த லவ் எல்லாம் பெருசா தெரியும். ஆனா போக போக இதெல்லாம் காணாம போயிடும். ரியாலிட்டி என்னனு தெரிஞ்சுக்கோ முரளி. சும்மா சொன்னதையே சொல்லாத" அவளின் குரல் பொறுமை இல்லாமல் ஒலித்தது.

"தமிழ், சரி உனக்கு பணம் வேணும்னா நான் சம்பாதிக்கிறேன். எவ்ளோ வேணும்? சொல்லு" அவன் மீண்டும் கேட்க, "உன்னால எவ்ளோ முடியும்? நீ இன்னும் படிச்சே முடிக்கல. அதுக்கு அப்பறம் வேலை கிடைச்சு....எனக்கு மாசத்துல நாலு நாள் ஷாப்பிங் போகணும். பார்லர் போகணும். வருஷத்துக்கு ஒரு முறை பாரின் ட்ரிப் போகணும். இதெல்லாம் செய்ய எவ்ளோ பணம் வேணும் தெரியுமா? உன்னை கனவுல கூட அதெல்லாம் சம்பாதிக்க முடியாது" அவளின் குரல் இம்முறை ஏளனத்துடன் ஒலிக்க அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

சில நொடி அமைதிக்கு பின் எழுந்தவன் "சே...உன்னை போயி லவ் பண்ணுனேன் பாரு" என அவளின் முன் அந்த பூங்கொத்தை விட்டெறிந்து விட்டு செல்ல, ராமின் கையில் இருந்த அந்த காபி கோப்பை அவனின் கோபத்தின் வெளிப்பாடாக உடைந்து நொறுங்கியது. அந்த இடத்தை வேகமாக வெளியேறியவன் கைகளில் வழிந்தஹ் ரத்தத்தை கூட உணராமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினான் நண்பர்களிடம் கூட சொல்லாமல்.

அருகே படுத்திருந்த தமிழின் முகத்தை பார்த்தான்.

"ஏன் அப்படி பண்ணுனா? எத்தனை நாள் அவளை மறக்க முடியாம அவ பேசுவதை நம்ப முடியாம பைத்தியம் பிடிச்சதை போல இருந்திருக்கேன். ஒரு ஸ்டேஜ்ல இதெல்லாம் பாசிங் க்ளவுட். காணாம போயிரும்னு கூட நினைச்சேன். ஆனா நான் நினைச்சதை விட என்னுடைய அந்த பீலிங்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா வளந்துச்சு. உன்னை மறக்கணும்னு பார்ட்டி போக ஆரம்பிச்சேன். என்னை சுத்தியும் நல்லவங்களா கெட்டவங்களோ நாலு பெரு பிரெண்ட்ஸ்னு கூட இருக்கற மாதிரி பார்த்துக்கிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.