நீங்களோ அதை கண்மூடி திறப்பதற்குள் யாரோ உள்ளே இழுத்ததாக சொன்னீர்கள் அல்லவா...
ஆம் ஆம் யாரோ கையை பிடித்து உள்ளே இழுப்பது போல அந்த கப்பலை பிடித்து உள்ளே இழுத்துச் சென்று விட்டார்கள்.
எஸ்... அந்த கப்பல் .... அதான் உள்ளே இழுத்துச் செல்லப்பட்ட அந்த கப்பல் பாதுகாப்பாக தான் இருக்கிறது.
எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் டாக்டர் பிரசாத்..
இங்கே வாங்க பிரதாபன் என்று தன் லேப்-டாப்பில் திரையை காண்பித்தார் டாக்டர் பிரசாத்.
அதில் சில தகவல்களை காண்பித்தவர் சில ரேடியேஷன் அந்த இடத்தில் தற்போது ஆள் நடமாட்டம் இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்கிறது.
அப்படி என்றால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்து இருக்கலாம் அல்லவா.
அங்கிருந்து வெளியே வருவது அவ்வளவு சுலபம் இல்லை மிஸ்டர் பிரதாபன்.
என்ன சொல்கிறீர்கள் டாக்டர் பிரசாத்... அப்படி என்றால் நாமும் உள்ளே செல்ல முடியாது. அங்கு இருப்பவர்களும் வெளியே வரமுடியாது அப்படியா.
நான்தான் ஏற்கனவே சொன்னேனே... முடியாது என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை... முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இந்த விஷயத்தில் நாம் முயற்சிக்க போகிறோம். உள்ளே சென்று அங்கிருந்து நாம் வெளியே வரப் போகிறோம்.
டாக்டர் இதனால் நம் உயிருக்கு ஏதாவது ஆபத்து..
சில காரியத்தை நாம் அடைய வேண்டுமென்றால் நம் உயிரையும் துச்சமாக நினைத்து முன்னேறி செல்ல வேண்டும். இதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா...
அதற்கு இல்லை சார் என்று பிரதாபன் இழுக்க அப்போ உங்களுக்கு பயமாக இருக்கிறது, அப்படித்தானே என்றார் பிரசாத்.
அப்போ நான் வேறு யாரையாவது அழைத்து செல்கிறேன். நான் வெளியில் வந்ததும் மீதியான விஷயங்களைப் பேசிக் கொள்ளலாம்.
இல்லை... இல்லை இல்லை நானும் உங்களுடன் வருகிறேன். நாம் எவ்வாறு அங்கு செல்வது, எப்போது செல்ல வேண்டும், எப்படித் திரும்பி வருவது இதை பற்றி தாங்கள் கூற முடியுமா
சொல்கிறேன் கவனமாக கேளுங்கள் பிரதாபன்.
இன்னும் ஏறக்குறைய ஐந்து பவுர்ணமி கழித்த பிறகு மீண்டும் கிரகங்கள் அனைத்தும் 45 டிகிரி ஆங்கிள்ல மீண்டும் ஒரே நேர்கோட்டில் வர இருக்கிறது. இது அடிக்கடி நிகழும் விஷயமல்ல. எப்போதாவது நிகழ்கிற விஷயம்.