காலையிலேயே கோயிலுக்குச் சென்ற பாட்டி அம்புஜம் கூடவே தன் மருமகள்களான கோகிலா மற்றும் ஆனந்தி கூடவே வாணி வரவும் அவர்களை அழைத்துக் கொண்டு வரலட்சுமி விரதத்தில் கலந்து கொண்டார்.
ஹரிஹரன் நெய்த பட்டுப்புடவையில் பாட்டி, கோகிலா, ஆனந்தியிருக்கவே வாணி அதைப் பார்த்து ஆசைப்பட்டார்
”ரொம்ப அழகாயிருக்கு இந்த புடவை, இந்த மாதிரி நான் எங்கேயும் பார்த்ததில்லை” என வியப்பாக கேட்கவும்
”இதை ஹரிதான் நெய்ஞ்சி கொடுத்தான்” என்றாள் கோகிலா
”நீங்க கொடுத்து வைச்சவங்க, உங்களுக்கு அழகான புடவை கிடைச்சிருக்கு எங்க வீட்லயும் ஹரி மாதிரி ஆளு இருந்தா நாங்களும் உங்களை போல அசத்துவோமே” என சொல்லிக் கொண்டே இன்னொரு பெண்மணி அங்கு வந்தார். அவளுடன்
”வந்துட்டியா எப்பப்பாரு எங்க ஹரியை கண்ணு வைக்கறதே உன் வேலையா போச்சி” என அலுத்துக் கொண்டார் பாட்டி
”நான் கூட எத்தனை முறை ஹரி கிட்ட கேட்டேன் முடியாதுன்னு சொல்லிட்டான் ஒரு புடவை தந்தா என்னவாம் அவனுக்கு கொறஞ்சா போயிடுவான்”
“கடையிலதான் விக்குதே அதை வாங்கிக்க”
“கடையில நீங்க கட்டற புடவை விக்கலையேம்மா” என்றாள் வந்தவளும்
”உன் கிட்ட சண்டை போட எனக்கு நேரம் இல்லை, இன்னிக்கு வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் நாங்க நேரத்தோட விரதம் முடிச்சிட்டு போறோம் ராகுகாலம் வந்துடப்போகுது” என பாட்டி அங்கிருந்தவர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றார்.
அந்த கோயில் அம்மன் கோயில் தாத்தா பார்த்தசாரதியின் பொறுப்பில் இல்லாத கோயில் அவருடைய எதிரியான ரங்கநாதனிடம் ஒப்படைத்த 3 கோயில்களில் அந்த கோயிலும் ஒன்று.
ரங்கநாதன் ஊருக்குள் பெரிய பணக்காரன்தான், அவனுக்கென்று துணிக்கடைகள் உண்டு பார்த்தசாரதியை போலவே அந்த ஊரில் இருப்பவர்களும் அன்னதானத்திற்காக தங்களுக்குள் கோயில்களை பிரித்துக்கொண்டனர், ரங்கநாதனுக்கும் 3 கோயில்கள் வர துணிக்கடையை தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு கோயிலுக்குள் தன்னை ஒரு பெரிய மனிதராக அலப்பறை செய்துக்கொள்வார். இன்றும் அப்படித்தான்.
அம்மன் கோயில் என்பதால் வரலட்சுமி விரதத்திற்கு நிறைய பெண்கள் வருவார்கள் என பார்த்து பார்த்து பிரசாதம் அன்னதானம் என செய்திருந்தான். அங்கு சாப்பிட்டவர்கள் பிடித்து சாப்பிட்டாலும் போகும் போது ஹரியோட கைருசி இங்க வரலை என ஒரு கொக்கி போட்டு