கதிரவனைத் தேடி அலைந்து ஓய்ந்து ஒருவழியாக தோப்பில் பிடித்தான் ராகவன்
”இவனை தேடியே நான் தேஞ்சிடுவேன் போல இருக்கு, ஒரு இடத்தில இருக்கானான்னு பாரு, எப்படித்தான் இவன்கூட என் தங்கச்சி குப்பை கொட்டுவாளோ” என சத்தமாக புலம்பிக் கொண்டு வர அவன் சொன்னதைக் கேட்ட கதிரவனோ கோபத்துடன்
”வேணாம் ராகவா இப்படி பேசாத, எனக்கு உன் தங்கச்சி வேணாம்“
”இதப்பார்றா உன் விருப்பத்தை இங்க யார் கேட்டது, என் தங்கச்சி எப்பவோ முடிவு எடுத்துட்டா, ஒழுங்கா அவள்கூட வாழற வழியைப் பாரு”
”முடியாது நான் வீட்டுக்குப் போறேன்“
”தாராளமா போ, அங்கதான் இப்ப யாருமில்லையே பாவம் என் தங்கச்சி தனியா இருக்கா அப்பா அம்மா வேற இல்லை, அவளையும் கூட்டிட்டு போய் உன் வீட்ல தங்க வைச்சிக்க”
”ஆஆஆ அதெல்லாம் முடியாது, உன் வீடு இருக்குல்ல உன் வீட்ல உன் தங்கச்சியை தங்க வைச்சிக்க, நான் ஏன் என் வீட்ல அவளை தங்க வைக்கனும்”
”சரிப்பா சரி இன்னும் ஏன் இங்கயே இருக்க வீட்டுக்கு போக வேண்டியதுதானே”
”அது என் இஷ்டம் நான் போவேன் போகாமலும் இருப்பேன் உனக்கென்ன”
”வர வர நண்பன்னுகூட பார்க்காம எதிர்த்து எதிர்த்து பேசற, ஆயிரம் கேள்விகள் கேட்கற, நீ யார்கூடவும் பேசாம மாசக்கணக்கில இருந்தப்ப கூட எனக்கு கஷ்டம் தெரியலை, நீ இப்ப பேசியே என்னை கஷ்டப்படுத்தறடா”
”நானா நான் ஒண்ணும் யாரையும் கஷ்டப்படுத்தலை”
”இதப்பாரு கதிர், என்னிக்குமே நான் உனக்கு நண்பன்தான் அதை மறந்துடாத, உனக்கு ஒரு நல்லது செய்யனும்னு ஆசைப்படறேன், நீ வேணாம்ங்கற இப்படியே தனிமரமா வாழ்ந்துடலாம்னு நினைக்காத, உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கறது அவசியம்”
”எனக்கு வேணாம், தனியாவே பல வருஷங்கள் வாழ்ந்துட்டேன், இப்ப என்ன புதுசா துணை வேணும்னு நினைக்க, இப்பவே நான் நல்லாதான் இருக்கேன்”
”அதை நீ சொல்லாத, விட்டேத்தியா திரியற, நீ வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கைன்னு மட்டும் சொல்லாத சரியா, கிளம்பு வா வீட்டுக்கு போவோம்”
”நான் அப்புறமா வரேன், நீ அவளை கூட்டிட்டு போ”
”உன் பிரச்சனை என்ன, என் தங்கச்சிதானே அவளை நீ பிரச்சனையா பார்க்காம என் தங்கச்சியா பாரு சரியாயிடும்”
”முடியாது நான் அவளை எப்படியும் பார்க்கறதாவே இல்லை நீ போ”
”இவ்ளோ பிடிவாதம் ஆகாதுடா, அங்க அவளும் உனக்காக பிடிவாதம் பிடிக்கறா, இங்கு நீயும்