(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"சும்மா போயேன், சொல்றேன்!"

அவள் அவன் ரூமுக்கு போனாள், உள்ளே லைட்டை போட்டாள், அங்கே அப்துல் பெட்டில் படுத்திருப்பதை பார்த்த அவளுக்கு ஷாக் அடித்தது.

"ஹேய் ஆதூ, நீ என்ன பண்ற இங்க? எப்ப வந்த? ஏன் யாருமே சொல்லல என்கிட்டே?"

உணர்ச்சியே இல்லாத குரலில், "வா இங்க உக்கார்!" என்று தன் பெட்டில் தன் பக்கத்தில் உட்காரும்படி கை காட்டினான்.

"இல்ல பரவாயில்ல ஆதூ சொல்லு, நீ எப்ப வந்த? ஏன் அஜய் சொல்லவேயில்லை, உன் பேரன்ட்ஸ் வந்திருக்காங்க தெரியுமா?"

'ஹ்ம்ம் தெரியும்!"

'அப்ப நீ எதுக்கு இங்க.... ஓ! உன் வேல தானா இதெல்லாம்?"

"என்ன வேல தனம்?"

"ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத, சரி சொல்லு நீ எதுக்காக ஒழிஞ்சிட்டு இருக்க, தைரியமா வந்து வெளியே இருக்கறது தான?"

"தைரியம் அன்னிக்கும் இல்ல, இன்னிக்கும் இல்ல, அதான் மனசு ரொம்ப வலிச்சுது. ஏதோ சுரத்தே இல்லாம காலைல நீ கிளம்பிட்ட, மனசு ரொம்ப வலிச்சுது தனம். நீ என்னை முழுமையா ஒதுக்கிடுவியோன்ற பயம், எனக்கு நீ வேணும் தனம், என்காதலியா,என் மனைவியா, என் மகனின் தாயா, என் தாயா, என்னவளா எனக்கு வேணும்டா, நீ எனக்கு வேணும்டா!"  நா தழு தழுக்க கூறினான் . 

"நான் எனக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கல, ஆனா என் அஜய்க்காக, அவன் பிறப்பை சரி பண்றதுக்காக கல்யாணம் பண்ணிக்கறேன்"

"இது போதும்டா, எனக்கு இது போதும்!"  கண்ணீர் விட்டான்.

"இப்ப எதுக்கு கண்ணீர், அதான் நீ நினைச்சது நடந்துடுத்து இல்ல?"

"என்ன சொன்ன நீ? எதுக்காக இப்படி நடந்துக்கற? "

"தெரியலையா ஆதூ? ஏன்னு தெரியலையா?"

"இல்லடா, எனக்கு தெரியல?"

"எப்படி தெரியும், இன்னிக்கு என்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் என் நினைப்பு வந்தது, நீ ஏற்கனவே கல்யாணம் பண்ணிண்டு ரெண்டு குழந்தைகள பெத்து வளர்த்திருக்க. இப்ப அவங்க மனசு என்ன பாடு படும்னு நீ யோசிக்கல இல்ல, ஒரு வேளை உன் மனைவி உயிரோடு இருந்திருந்தா என்ன பண்ணியிருந்திருப்ப? இதே மாதிரி என்ன கல்யாணம் பண்ணிக்க ரெடியாயிருந்திருப்பியா, உன் மனைவியை, உன் குடும்பத்தை என்ன பண்ணியிருப்ப நீ ஆதூ,

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.