"அதல்லாம் ஒண்ணுமில்ல, நீ என்ன சொன்னாலும் கரெக்ட்தான், நீ பாதிக்க பட்டவ தனம், அதுமட்டுமில்ல, உன்ன இந்த மாதிரி நிலைமைக்கு ஆளாக்கிட்டு நான் உன்ன மறந்து வேற ஒரு பெண்ணை நிக்கா பண்ணவன், அது உன் மனச எந்த அளவு பாதிச்சிருக்கும்னு தெரியும், இது நான் உன்னோட இடத்ல இருந்திருந்தா உன் அளவுக்கு பொறுமையா இருந்திருக்க மாட்டேன் தெரியுமா? நீ ரொம்ப பொறுமை! "
"ஐயா நல்லா குளிர்ந்திருச்சு, நிறுத்திக்குங்க இல்லேன்னா ஜன்னி கண்டுடும்!"
"தனம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், அம்மீயையும், வாப்பாவையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு எல்லாரும் ஒண்ணா டின்னருக்கு ஏதாவது ரெஸ்டாரண்டுக்கு போலாமா?"
"கண்டிப்பா போலாம்பா, இதல்லாம் இன்னும் கூடுதல் சந்தோஷம் தரும், நம்ம வீட்டிலேயே கூட எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்."
"இல்ல வெளிய போலாம், எங்கேயாவது ரெஸ்டாரண்டுக்குத்தான். "
"சரி சரி உன் இஷ்டம் போலயே செய்யலாம். "
அவன் தன் அம்மீக்கு கால் செய்தான். "அம்மீ, என்ன பண்றீங்க?"
"அபூ , நீ எங்களை மறந்துட்டியா, புது பையா எப்படியிருக்க ? தனம் எப்படியிருக்கா? இன்னிக்கு என்ன பண்ண? எங்க போயிருந்தீங்க?"
"அம்மீ, வாப்பா எங்க? ரெக்கார்டிங் தியேட்டர்ல இருக்காரா?"
"ஆமாம் அபூ!"
"அம்மீ இன்னிக்கு நாம எல்லோரும் ஒண்ணா டின்னருக்கு வெளிய போலாமா? வாப்பாவையும் வர சொல்றீங்களா?"
"என்ன அபூ திடீர்னு?"
"விஷயம் இருக்கும்மீ, ஆனா அத இப்ப சொல்ல மாட்டேன், நீங்க ரெண்டு பேரும் பிள்ளைங்களை கூட்டிட்டு வந்துடுங்க, பிறகு சொல்றன். "
"சரி அபூ, எங்க வரணும்?"
"அம்மா அத டெக்ஸ்ட் செய்யறேன் அங்க வந்துடுங்க."
"சரி ராஜா, தனம் எப்படியிருக்கா?"
"நேர்ல வருவீங்களே பாருங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கா."
"அவ சந்தோஷமா இருந்தா அதுதான் எனக்கு வேணும் ராஜா, நாங்க வரோம்!"
அவன் தனத்திடம் கேட்டு எந்த ரெஸ்டாரண்டுக்கு போகலாமென்று முடிவு பண்ணி அதை டெக்ஸ்ட் செய்தான், அஜய்க்கும் டெக்ஸ்ட் செய்தான், பிறகு அஜய்க்கு காலும் செய்தான்.
"ஏய் டாட் ,என்ன அம்மாவை ஆபிஸ்ல விட்டுட்டு வருவீங்கன்னு பார்த்தேன், என்ன