"வருவாங்க பாட்டிம்மா, எதுவாயிருந்தாலும் இனி அம்மா முடிவு பண்ணட்டும் பாட்டிம்மா, நாம இனி அவங்கள போர்ஸ் பண்ண வேண்டாம் அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாது!"
"ஆமாம் ராஜா, நானும் ஜாஃபரும் கூட அதான் பேசிட்டிருந்தோம்."
அப்போது தனம் வெளியே வந்தாள், சரிம்மா தனம் நாங்க கிளம்பறோம்மா!"
"ஆண்ட்டி இருங்க சாப்பிட்டுட்டு போலாம், எனக்கும் உங்க கிட்ட பேச வேண்டியிருக்கு! "
"என்னம்மா பேசணும், சாப்பாடெல்லாம் இருக்கட்டும், நீ சொல்லு?" என்று பேசிக் கொண்டே ஜாபஃரை பார்த்தார் நிக்கத்.
"வாங்க ஆண்ட்டி சாப்டுட்டே பேசலாம்!"
"இல்லம்மா, அப்றம் சாப்டலாம் இப்ப பேசலாம், நம்ம அஜய் பேசினதுக்கப்றம் அவன் மனசுல இருக்கறது புரிஞ்சுது, அதனால நீங்க சொன்ன மாதிரி உங்க மகனை கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா ப்ளீஸ் ஆண்ட்டி வெறும் ரெஜிஸ்டர் மேரேஜ் மட்டும் போறும்."
"ஏம்மா எங்க முறைப் படி நிக்கான்னு சொல்வோம்ன்னு நினைச்சியா?"
அவள், ஆச்சர்யத்துடன் அவரை பார்த்தாள்.
"அதான் வெறும் ரெஜிஸ்டர் மேரேஜ்ன்னு சொன்னியா?"
அவள் யோசிக்காமல் "ஆமாம் ஆண்ட்டி இதுவும் ஒரு காரணம். "
அப்படித்தானா? அதல்லாம் யோசிக்காத. மேரேஜ் ரெஜிஸ்டர் செய்ஞ்சுடுவோம்,. ஆனா வீட்ல தாலிய கட்டிட சொல்லு. உங்க முறை படியே தாலிய வாங்கிக்க, உங்க அம்மா அப்பா, நாங்க, வீட்லயே வச்சு முடிச்சிக்கலாம், போதுமா?"
"தேங்க்ஸ் ஆண்ட்டி இவ்வளோ புரிஞ்சிண்டிருக்கீங்க?"
"நானும் ஒரு பொண்ணுதான் தனம் அது மட்டுமில்லாம, எந்த மதமா இருந்தா என்னம்மா, மனுஷங்கதாம்மா முதல்ல, எதுக்கு மதத்தை கட்டிண்டு அழணும், எங்க ரெண்டு பேருக்கும் எம் மதமும் சம்மதம் தான், உங்க சந்தோஷம்தாம்மா முக்கியம், நீ இவ்வளவு தூரம் ஒத்துண்டியே அதுவே போதும். எனக்கு என் அபூ இனியாவது சந்தோஷமா இருந்தா போதும். "
"அஜய் உனக்கு ஓகே தானே, சந்தோஷமா?"
"ரொம்ப சந்தோஷம்தாம்மா எனக்கு, நான் சொன்னதை புரிஞ்சுண்டியே அதுவே போரும்மா!"
"இல்ல அஜய், இத நான் தான் முன்னாடியே புரிஞ்சுண்டிருக்கனும், அது என் தப்புதான் அஜய்."
"இட்ஸ் ஓகேம்மா, இப்போ நீ என் ரூம்ல இரு, நான் மாஸ்டர்கிட்டயும், பாட்டிம்மாகிட்டயும் பேசிட்டு உன்ன கூப்பிடறேன்."
"அதுக்கு எதுக்கு நான் உன் ரூமுக்கு போகனும்?"