(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"என்ன டாட் இது, நான் உங்க பையன்தான் ஏன் என்கிட்ட மன்னிப்பெல்லாம், இது சந்தோஷமா இருக்கவேண்டிய மூமென்ட், இப்போ போய் ரொம்ப எமோஷனலா பேசி நம்ம சந்தோஷத்தை போக்கிக்க வேண்டாம், நீங்க எனக்கு ஏதாவது கிப்ட் கொடுக்கணும்னா, இத்தனை வருஷமா எனக்கு கொடுக்காத சந்தோஷத்த கொடுக்கணும் , என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்?" என்று அவன் கேட்க,

அப்துல் அவன் முதுகில் செல்லமாக தட்டி, "இந்த உலகத்துல உள்ள எல்லா சந்தோஷத்தையும் உனக்கு கொடுக்கறேண்டா என் தங்கம்!"

அதற்குள் தனம் புகுந்து "ம்ம் உங்க டாட் உனக்கு உலகத்தில் உள்ள எல்லா சந்தோஷத்தையும் கொடுக்கறேன்றார், விடவே விடாதே என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்க!"

"என் உலகம், என் சந்தோஷம் ரெண்டுமே நீங்க ரெண்டு பேரும்தான், அதுவே கிடைச்சுடுத்து வேறென்ன வேணும் எனக்கு?" என்றான் புன்னகையோடு.

அவர்கள் இருவர் கண்களும் குளமாயின.

அதற்குள் பேரர் வந்து, "சார் ரெடியா ஆர்டர் எடுத்துக்கலாமா?" என்று கேட்க..

அஜய்,"  ஹ்ம்ம் ஆமாம் சாப்பிடணுமில்ல?" என்று தனக்கு தானே கூறிக் கொண்டு  அவன் அவர்களிடம் கேட்டு ஆர்டர் கொடுத்தான்.

ஆர்டர் ஒவ்வொன்னாக வர பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

அப்துலும், அஜயும் ரொம்ப பிரெண்ட்லியாக பேசிக் கொண்டனர், ஒருத்தருக்கொருத்தர் கிண்டலடித்துக் கொண்டும் படிப்பை பத்தியும், ஸ்போர்ட்ஸ் பற்றியும், கரண்ட் பாலிடிக்ஸ் பற்றியும், அப்பப்போ தனத்தை கிண்டலடித்துக் கொண்டும் பேசுவதை பார்த்தால்,  என்னவோ ரொம்ப வருஷம் பழக்கம் போல பேசிக் கொண்டார்கள் .

சாப்பிட்டு முடித்தனர், பின் கிளம்ப தயாரானார்கள்.

"ஸோ, அப்பாவும் பிள்ளையும் எல்லாம் பேசி முடிச்சுட்டீங்களா? நாம இடத்தை காலி பண்ணா பாவம் அடுத்தவங்க வந்து உக்காருவாங்க!"

நாசூக்காக கூறினாள் தனம்.

"சரி இடத்தை காலி பண்ணலாம்னு சொல்ற, சரி போலாம் வா" என்று அப்துல் தன் மகனின் கையை பிடித்துக் கொண்டு எழுந்தான்.

"ஐ அம் ஸோ ஹாப்பி அஜய், வெரி ப்ரவுட் ஆப் யு மை சன்... என்னால நம்பமுடியல நான் என்னோட மகன், அவன் இவ்வளவு பெரியவனா, என்னோட எல்லாத்தை பத்தியும் ஒரு பிரென்ட் போல பேசிண்டு, எனக்கு எங்கேயோ பறக்கற மாதிரி இருக்கு!" என்று உல்லாசமாக தனத்தை பார்த்து சிரித்தான், அவனின் அந்த சிரிப்பை பார்த்ததும் அவள் முகம் சிவந்தது.

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.