(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அவனும், இவர்கள் இருவரையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான், உள்ளுக்குள் வேதனையாகவும் இருந்தது, அஜய் அப்படியே இவனையே ஜாடையில் கொண்டிருந்தான்.

"வா!" என்று அவனைக் கூப்பிட்டாள்.

அஜய் அம்மாவை பார்த்தான் அவள் முகத்தில் தனி ஜ்வாலை தெரிந்தது, என்ன சீக்ரெட் என்று மனதில் நினைத்திருந்தான். அப்போது தான் அப்துல் அருகில் வந்தான். அவனை பார்த்தவுடன், தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான், "இது....?" என்று அஜய் வியந்து கேட்கவும்,

"இது.... "என்று தனம் சொல்ல ஆரம்பிக்கவும்,

"எனக்கு தெரியும்மா, ஜாஃபர் மாஸ்டரோட மகன்,சரியா சார்!"

அப்துலுக்கு மனதை பிழிந்தெடுத்தது, அவன் முகம்போன போக்கை பார்த்து,

"நீ சொன்னது கரெக்ட் அஜய் கண்ணா, அதையும் மீறி அப்துல் என்னோட பரென்ட்!"

'ஓ அப்படியா, இதை ஏன் முன்னாலேயே சொல்லல நீ?"

"எனக்கே இன்னிக்குதானே தெரியும். சார் ஜாஃபர் அங்கிளோட மகன்னு."

"ஓ அப்படியா?"

"ம் அதுமட்டுமில்ல, டிட் யூ நோட்டிஸ்...... ஹி ரிசெம்பிள்ஸ் யு!"

"ஐ கெட் இட், இத்தனை நாளாய் இவர் ஜாடை எப்படி நமக்கு வந்ததுன்னு யோசிச்ட்டிருந்தேன், இப்பதான் புரிஞ்சுது," என்று அப்துலையே பார்த்துக் கொண்டிருந்தான் அஜய். அப்துல் அந்த பார்வையில் குற்ற உணர்ச்சியில்  தலை குனிந்தான்.

"டாட் !" என்று கூப்பிட்டான் அஜய், அந்த அழைப்பில் தலை நிமிந்தான், இரு கைகளையும் நீட்டி, "கமான் டாட், என்னை பார்க்க மாட்டீங்களா? என்னை கட்டி தழுவ மாட்டீங்களா டாட்?"

அவன் அருகில் சென்று அவன் நீட்டிய கையில் தஞ்சம் புகுந்து, அவனும் தன் மகனை இறுக்கமாக கட்டி அவன் இரு கன்னத்திலும் முத்தம் கொடுத்தான்.

 "இவ்வளவு அருமையான மகனா எனக்கு? எனக்கு பெருமையா இருக்குப்பா உன்ன பார்த்தா, என்ன மன்னிச்சுடுடா அஜய், என் ராஜா என்ன மன்னிச்சுடுடா!" என்று அவன் உருகி தன் மனதில் இருப்பதை கண்ணீருடன் கூறியதை அங்கு சுற்றி இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ஆதூ என்ன இது ஆதூ, இது பப்லிக் பிளேஸ், எல்லோரும் நம்மையே பார்க்கறாங்க பார்" என்றாள் தனம்.

அவன் சுற்றி பார்த்து விட்டு "சாரி" என்று கண்ணை துடைத்துக் கொண்டான், "சாரி தனம், சாரி அஜய்!" என்றான் அப்துல்.

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.