"நீங்க என்ன சொல்ல வரீங்க ஆண்ட்டி ?"
"இம்ரான், சாய்ரா, நானும் உங்க அப்பாவும் சின்ன வயசுலேர்ந்தே பிரெண்ட்ஸ், ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்ஸ்ன்னு வச்சுக்கோயேன்."
"உங்கள இத்தனை நாளா பார்க்கவே இல்லையே ஆண்ட்டி?"
'ஹ்ம்ம்.... ஆமாம், உங்க அப்பா பதினஞ்சு வயது இருக்கச்சேயே அவங்க இந்த ஊருக்கு வந்துட்டாங்க, அப்ப நாங்க வேற ஊர்ல இருந்தோம், அதனால அவங்க எங்கேயிருக்காங்கன்னு தெரியல, இப்பத்தான் தெரிஞ்சுது... வெல்,சில பல விஷயங்கள் உங்களோட பேசற வயசு உங்களுக்கு வந்தவுடன் சொல்றேன், ஆனா உங்க அப்பா இப்ப என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேக்கறாரு, அதுக்கு பல காரணங்கள் இருந்தாலும் எனக்கு உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் இருந்தா ஒழிய என்னால உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது, அதுவும் இன்னிக்கே இப்பவே பண்ணனும்னு சொல்றாரு, இப்ப உங்க முடிவு எனக்கு வேணும், உங்க மனசுல என்ன இருந்தாலும் சொல்லுங்க" சொல்லிக் கொண்டிருந்த போதே, சாய்ராவின் கையை எடுத்து தன் கையோடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.
சாய்ரா ஒன்றும் சரியாக புரியாவிட்டாலும், அப்பாவுக்கு கல்யாணம் என்பது புரிந்தது, இம்ரானுக்கும் ஓரளவுக்கு புரிந்தது.
"அப்போ நீங்கதான் எங்க அம்மாவா?" சாய்ரா கேட்டவுடன் அவளை தன்னோடு அனைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள், தனம்.
"சாய்ராவுக்கு என்னை பிடிச்சிருக்கா?"
"ம்ம்ம்... பிடிச்சிருக்கு, உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."
"இம்ரான் நீ சொல்லுப்பா, உனக்கும் சம்மதமா?"
"எனக்கு ஒன்னும் புரியல ஆண்ட்டி, ஆனா சாய்ராக்கு சந்தோஷம்னா, எனக்கும் சந்தோஷம்தான். "
"ஏன் இம்ரான் உனக்கு என்னை பிடிக்கலையா? இல்ல பிடிச்சிருக்கா?"
"ஆண்ட்டி உங்கள பிடிச்சிருக்கு, என்ன பெரிய பையனா நினச்சு கேக்கறது பிடிச்சிருக்கு, ஆனா இந்த நிக்கா பத்தியெல்லாம் தெரியாது ஆண்ட்டி, இத்தனை நாளா எங்க அம்மீ கூட நாங்க யாருமே சந்தோஷமாயில்ல,எங்க பெரியம்மீதான் எங்களுக்கு எல்லாம் செய்வாங்க, ஆனா இப்ப நீங்க நல்லா பேசறீங்க எங்க கிட்ட, அதான் சாய்ரா உங்க கிட்ட ஒட்டிகிட்டா, அவ சந்தோஷமா தெரியறா, நானும் அவள பார்த்து சந்தோஷ படறேன்."
"இங்க வா" என்று அவனையும் தன் அருகில் அழைத்து அவனின் தலையில் முத்தம் கொடுத்து, உங்க சந்தோஷம் என்னால கெடாதுப்பா."