கூடாது."
"மத்தவங்க சொல்றத விடு, என்னால உன்ன விட்டு இனி உயிரோட இருக்க முடியாது தனம், தேங்க்ஸ் உனக்கு, நீ என்ன கல்யாணம் செய்ஞ்சுக்க ஒத்துக்கிட்டியே ."
அவள் அவனையே பார்த்தாள், "என்னடா என்னையே பார்க்கற? எனக்கு டைம் ஆயிடுச்சு, ரொம்ப நேரம் பேசிட்டோம், எனக்கு ஒர்க்குக்கு லேட் ஆயிடுத்து, மிச்சத்தை ஈவினிங் பேசிக்கலாம் நான் வரட்டா?"
அவள் பார்வைக்கு அர்த்தம் புரிந்தாலும், அவன் இருப்பது வேலை செய்யும் இடம். அதான் கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.
அவன் தன் டேபிளில் உட்கார்ந்தவுடன் அவன் வேலையில் மனம் முழுக்க செலுத்தினான்.
சாயந்திரம் ஒரு டீமோட ப்ராஜெக்டில் ஒரு ப்ராப்லம் அதற்கான மீட்டிங்கில் இருந்தாள்
அப்துல் எட்டி பார்த்தான், அவள் மீட்டிங்கில் இருப்பது தெரிந்தது, ஆனால் அவனை உள்ளே வர சொன்னாள், அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான், அவர்கள் மீட்டிங் தொடர்ந்தது, அதை அவனும் கவனித்துக் கொண்டிருந்தான், அப்போது தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்த ப்ராப்லம் புரிந்தது, "தனம் மேடம் நான் பேசலாமா?"
"என்ன விஷயம்?"
"நான் இதை சால்வ் பண்றேன் கவலப் படாதீங்க மேடம், நாளைக்கு பார்த்துக்கலாம், நானே செய்யறேன்."
"ஓகே, மிஸ்டர் அப்துல் நாளைக்கு இதை செய்யறேன்னு சொல்றார், ஸோ டோன்ட் ஒர்ரி ஹி வில் டேக் கேர் ஆப் இட்!.'
"ஓகே மேடம் தேங்க்ஸ் , தேங்க்ஸ் சார்!"
"நாளைக்கு பார்க்கலாம்!"
"ஓகே , வா தனம் நாம கூட போகலாம்."
"ம், போகலாம், வா!"
அவர்கள் வந்து காரில் ஏறும் போது, அங்கிருந்து சென்றவர்கள் பார்க்கிங் அருகில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள், அவர்கள், இவர்கள் இருவரும் காரில் ஏறுவதை பார்த்தார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள், அவர்கள் எல்லோருக்கும் தனத்தை பற்றி நன்றாக தெரியும் அவள் எந்த ஆண் மகனுடனும் அனாவசியமாக பேசக் கூட மாட்டாள் , இப்போதோ இந்த புது ஆளுடன், காரில் ஏறிக் கொண்டு போகிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் சென்றவுடன், "யாருடா இந்த ஆள், அவனோட மேடம் போறாங்கன்னா, ஒரு வேளை ரொம்ப பிரெண்டா இருக்கும், இல்ல லவரா இருக்குமோ என்று ஒருவன் கேட்க