(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

சரின்னு சொல்ல வரல, ஆனா உன்ன மட்டும் அதுக்கு பொறுப்பாக்க முடியாது, ரெண்டு பேருமே அறியாத செய்ஞ்ச  தப்பு " என்று பேச்சை நிறுத்தினாள்.

"நீ, உன் மேரேஜ் ?" என்று அவளை கேட்டான் .

"ஆது, என் மேரேஜ் எப்போ உன்னோட அதெல்லாம் முடிஞ்சுதோ, அப்பவே எல்லாம் முடிஞ்சுது."

"நீ இப்படி கல்யுணம் செய்யாம இருந்துண்டிருக்க நான்..... நிக்கா பண்ணி பிள்ளைங்களை பெத்து, குடும்ப வாழ்க்கையை வாழ்துண்டிருந்திருந்திருக்கேன். என்ன மனுஷன் நான்... சே, என்ன பார்த்தா எனக்கே பிடிக்கல."

"கமான் ஆதூ, உனக்கு தெரியாது எனக்கு ஒரு குழந்தை பொறந்ததுன்னு, தெரிஞ்சா நீயும் என்ன மாதிரி தான் இருந்திருப்ப, உன்னை பத்தி எனக்கு தெரியும் , உன் மேல எந்த தப்பும் இல்ல, உன்ன நீயே நொந்துக்காத. " கூறிவிட்டு, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"லுக் ஆது, இனி ஒன்னுமே ஆவப் போவது இல்ல, முடிஞ்சு போனத பேசி ஒன்னும் பிரியோசனமில்ல.. ஆனது ஆய்போச்சு விடு.."

"சரி விடு, இப்போ நீ எங்க இருக்க?"

"அஜயோட இருக்கேன்!"

"அப்போ, அஜய் நம்ம பையனா?"

"ஆமாம் நம்ம பையன்தான், நீ அவனை பார்த்திருக்கியா, அப்படியே உன் ஜாடையில் இருக்கான்?"

"நான் பார்த்தேன் அவன் சின்ன பையனா இருக்கப்ப, என் ஜாடையிலேயே இருக்கானே யார் இவன்னு நினைச்சேன், அப்போ என் மகன்தானா அவன்? சீ என்ன முட்டாள், நான் என் அப்பாவை சந்தேகப் பட்டேன். இந்த இன்சிடென்ட் எனக்கு கொஞ்சம் கூட ஞாபகம் இல்ல, எப்படி ஞாபகம் இல்லேன்னு தெரியல.."

என்று தன்னைத்தானே நொந்துக் கொண்டான்.

அப்போது தனத்தின் போன் மணி அடித்தது, எடுத்து பார்த்தாள், அஜய்தான்.

"ஹ்ம்ம் சொல்லு அஜய், ஹௌ வாஸ்  யுவர் ப்ரெசென்ட்டேஷன்?"

"ரொம்ப நன்னா போச்சும்மா, உன்னோட ரெக்கார்டிங் முடிஞ்சுதா, ஹௌ அபௌட் ஹாவிங் லன்ச் டுகெதர்?"

"ஹ்ம்ம் ஷுயூர், பட் ஐ ஹவ் சம் ஒன் வித் மீ, அவங்களும் நம்மகூட ஜாயின் பண்ணிக்கலாமில்ல? என்ன சொல்ற?"

"யாரும்மா அது? யார் அந்த வி ஐ பி ?  யுவர்  பிரென்ட்?"

"என் பிரெண்ட்தான், பட் அ சர்ப்ரைஸ் பார் யூ!"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.