(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

இதுப் பத்தி என் கிட்ட சொன்னா... அப்போ கூட இதையே தான் நான் கேட்டேன்.. ஏன் வினோ? எதனால இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?”

“எங்களுக்குன்னு தனியா ஒரு வீடு வேணும்னு நினைச்சேன்... அது தப்பா??”

“அதை தப்புன்னு சொல்ல முடியாது... ஆனால் எதுக்கு தனியா போகனும்னு முடிவு செய்தீங்க? அதை சொல்லுங்க...”

“நான் டெலிவரிக்கு போயிருந்தேன்ல மஞ்சு, அப்போ என்னோட பழைய ஃபிரென்ட்ஸ் நிறையப் பேரை சந்திக்குற வாய்ப்பு கிடைச்சது... ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டைப் பத்தியும், அதுல இருக்க டெகரேஷன்ஸ் பத்தியும் சொல்லும் போது தான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு...”

மஞ்சு நம்ப மாட்டேன் என்று சொல்பவளைப் போல தலையை ஆட்டினாள்...

“நிஜமா தான் சொல்றேன் மஞ்சு... நமக்குன்னு ஒரு வீடு வேண்டாமா?? எத்தனை வருஷம் ஆனாலும் அது அவங்க வீடு... அத்தை, இவர், மனோஜ், ஜோதி சொந்தம் கொண்டாடலாம், நம்மால முடியுமா? ஹால்ல டிவியை மாத்தி வை, பெயின்ட் கலரை மாத்துன்னு நம்மால சொல்ல முடியுமா?? சொன்னாலும் யாராவது கேட்பாங்களா?? எங்களுக்கே எங்களுக்குன்னு சின்னதா இருந்தாலும் சொந்தமா ஒரு வீடு, அது தான் எனக்கு வேணும்...”

“சரியா தான் சொல்றீங்க வினோ... இப்போவே வாங்குங்க... வீட்டுல இன்வெஸ்ட் செய்ற மாதிரி வேற ஒண்ணுமே கிடையாது...”

வினோதினி குழப்பத்துடன் மஞ்சுவைப் பார்த்தாள்...!  

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

3 comments

  • Check or checkmate :Q: idhu thevai illadha matter illai so mr m oda PBS kandupa involve agalam 😁😁 illati problem yaru solve panurangalam??😉<br />Vino oda aasai nyayamandhu but adhukkunu sondha veedukaga sondhathai vittu poganuma :Q: someone has to get compromised parkalam manju oda attempt success agumanu.....nice update ma'am 👏👏👏👏👏👏👏<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.