(Reading time: 8 - 16 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

சொல்றீங்க!...நீங்க கோகுல்தான்!...என் கிட்டேயிருந்து பணத்தை வாங்குவதைத் தவிர்ப்பதற்காக பொய் சொல்றீங்க” என்றாள்.

  

“இல்லைம்மா...சத்தியமா நான் கோகுல் இல்லை!...நீங்க சொல்ற கோகுல்....இறந்திட்டாரும்மா”

  

சட்டென்று நெஞ்சில் கை வைத்த அந்தப் பெண், “என்ன சார் சொல்றீங்க?”

  

“ஆமாம்மா....நண்பர்களோட பிக்னிக் போன கோகுல்...போன இடத்துல நடந்த ஒரு சின்ன விபத்துல இறந்திட்டாரும்மா!...என் பேர் முரளி!...நான் சமீபத்துலதான் கோயமுத்தூர் வந்தேன்!..உருவத்துல நான் கோகுல் மாதிரியே இருக்கும் ஒரே காரணத்திற்காக கோகுலோட அப்பா....அவரோட டிரான்ஸ்போர்ட் கம்பெனில எனக்கொரு வேலை போட்டுக் குடுத்து...அவர் வீட்டு அவுட் ஹவுஸிலேயே என்னைத் தங்கவும் வெச்சிருக்கார்!...”

  

மிரட்சியோடு தன்னைப் பார்த்த அப்பெண்ணிடம், “ஆமாம்...கோகுல் உனக்கு என்ன உதவி செஞ்சாரு?...எதுக்காக நீ அவருக்கு பணம் குடுக்கறே?”

  

“சார்...என் பேரு நித்யா!...நான் கௌதம் ஜுவல்லரில வேலை பார்த்திட்டிருந்தேன்!...ஒரு நாள் எங்க ஜுவல்லரிக்கு வந்த ரெண்டு பெண்களுக்கு நான் நகைகளைக் காட்டிட்டிருந்தேன்!...ரொம்ப நேரம் நகை வாங்கற மாதிரியே போக்குக் காட்டிட்டிருந்த அப்பெண்கள் இருவரும் கடைசியில் எதுவும் வாங்காமல் சென்று விட்டனர்!...அவர்கள் போன பிறகு நான் நகைகளை எடுத்து வைக்கும் போதுதான் கவனிச்சேன்...அவங்க ஒரு மோதிரத்தைத் திருடிட்டுப் போயிட்டாங்க...என்கிற விபரத்தை!...முதலாளி கிட்ட சொன்னேன்...அவர் என்னைத்தான் “காச்...மூச்”ன்னு திட்டினார்!...அப்புறம் அதுக்கான பணத்தை கட்டிட்டு வேலையை விட்டுப் போகச் சொன்னார்!...”

  

“அடப்பாவி!...அவங்க திருடிட்டுப் போனதுக்கு நீ என்னம்மா செய்வே?” அங்கலாய்த்தான் முரளி.

  

“உங்களுக்குத் தெரியுது!...ஆனா அந்த முதலாளிக்குத் தெரியலையே?...சாயந்திரம் வரைக்கும் நான் கடையில் அழுதிட்டே உட்கார்ந்திட்டிருந்தேன்!...எங்கியோ வெளிய போயிட்டு சாயந்திரமா வந்த முதலாளி...என்னோட சம்பளத்தைக் கணக்குப் போட்டுக் கழிச்சிட்டு... “சரி...ஒரு பத்தாயிரத்தைக் கட்டிட்டு வெளிய போ”ன்னு சொன்னார்!...நான்  “வீட்டுக்குப் போய்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.