(Reading time: 5 - 10 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

சில நிமிடங்களுக்குப் பிறகு, “நான் அப்படியே கிளம்பறேன் முரளி” என்ற சொக்குவை, புன்னகையோடு பார்த்த முரளி,

  

 “சொக்கு சார்...மணி இப்ப பதினொண்ணு...உங்க ஊருக்குப் போக இனிமேல் பஸ்ஸும் இல்லை!...உங்க கிட்ட வண்டியும் இல்லை!...எல்லாத்துக்கும் மேலே நீங்க இன்னும் முழு நிதானத்துக்கு வரலை!...அதனால ராத்திரி இங்கியே தங்கிட்டு...காலைல கிளம்பலாம்!...அப்படியே படுத்துத் தூங்குங்க!”

  

“இல்லை...முரளி...நான் எப்படியாவது...” சொக்கு இழுக்க,

  

“எப்படியாவது”ன்னா எப்படி?...அதெல்லாம் முடியாது...பேசாம படுத்துத் தூங்கிட்டு காலைல போங்க!” அன்பாகக் கட்டளையிட்டாள் வசந்தி.

  

அமைதியானான் சொக்கு.

  

இரவு,

  

உறக்கம் பிடிக்காமல் படுத்துக் கிடந்த சொக்குவுக்கு அன்றைய அனுபவம் ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  “இவர்களெல்லாம் யார்?...இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு?...இவர்கள் எதிரில்தானே நான் அந்த தனசேகரைக் கத்தியால் குத்தினேன்?...அப்புறம் எப்படி என்னை தைரியமாய் வீட்டிற்குள் அழைத்து உணவு பரிமாறுகின்றனர்?....இதற்குப் பெயர்தான் அன்ப?...பாசமா?...நேசமா?

  

ஏனோ உள்ளுக்குள்ளிருந்து “குபுக்”கென்று ஒரு அழுகை எட்டிப் பார்த்தது.

  

மறுநாள் காலை, ஏழு மணி வாக்கில் எழுந்த சொக்கு, தனியாய்க் கிளம்பத் துடிக்க, “இருப்பா...நானே என் வண்டில கொண்டு போய் உங்க ஊர்ல விடறேன்” என்று சொல்லி தனது டி.வி.எஸ்-50ஐ ஸ்டார்ட் செய்தான்.

  

போகும் முன் திரும்பி வசந்தியைப் பார்த்தான்.  அவள் அழகாய்ப் புன்னகைத்து “டாட்டா”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.