மஞ்சு செல்லமாக மனோஜை அடித்தாள்...
“எனக்கு அதெல்லாம் வேண்டாம் மனோஜ்... நீங்க மட்டும் தான் வேணும்...”
“நான் உனக்கு மட்டும் தான்... அது உனக்கே தெரியும்...”
மஞ்சு இன்னும் தோதாக அவனுடன் ஒண்டிக் கொண்டாள்...
“கௌரவ் தான் உன்னோட ரிப்போர்ட்டிங் மேனேஜர்ல?”
“எதுக்கு கேட்குறீங்க மனோஜ்?”
“பொதுவா எல்லோரையும் பத்தி என்கிட்டே சொல்லுவ... இன்னைக்கு நாம மீட் செய்தவங்க எல்லோருமே நீ என் கிட்ட மென்ஷன் செய்தவங்க... ஆனால் கௌரவ் பத்தி நீ சொன்னதா ஞாபகம் இல்லை...”
“அவர் ரிப்போர்ட்டிங் மேனேஜர் ஆனால் நான் இருக்க ஆபீஸ்ல இல்லை. எப்போவாவது தான் வருவார்... ஸ்டேடஸ் அப்டேட்ஸ், ஜெனெரல் அப்டேட்ஸ் ஷேர் செய்றதோட சரி... மத்தபடி அசோக், கோமதி தான் என் பக்கத்துல இருக்குறவங்க...”
“அவங்க இரண்டுப் பேரும் நல்ல டைப் போல தான் தெரியுது... கௌரவ் பத்தி தான் நல்ல இம்ப்ரஷன் கிடைக்கலை...”
“ஆமாம், அசோக், கோமதி நைஸ் பீப்பிள்... கௌரவ் கொஞ்சம் ஸோ-ஸோ... ஆனாலும் டோன்ட் வொர்ரி, நான் மேனேஜ் செய்துப்பேன்...”
மனோஜ் மஞ்சுவின் தலை உச்சியில் மெல்ல முத்தமிட்டான்.
மஞ்சு இப்போதும் முகத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள்...