சாதனாவும் சிரித்தாள்!
“சது, இப்போ எதுக்கு கல்யாணம் பத்தி தேவை இல்லாமல் யோசிச்சுட்டு இருக்க. நீ சொன்னது போல வாய்ப்பு இருக்கும் போதே ஜாலியா என்ஜாய் செய்...” என்றாள் மஞ்சு!
மற்ற நேரங்களைப் போல ‘கல்யாணம் இஸ் தே பெஸ்ட்’ என்று திருமணத்திற்கு விளம்பரம் கொடுக்காமல் மஞ்சு பேசியது சாதனாவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஆனாலும் அதைப் பற்றி விலாவரியாக கேட்க அவளுக்கு தயக்கமாக இருந்தது. எனவே வேறு விஷயங்களை பற்றி பேசி பேச்சை மாற்றினாள்.
மஞ்சுவும் அதை ஏற்றுக் கொண்டு பேச்சை தொடர்ந்தாள்!
ஆனால் சாதனா சொன்ன விஷயத்தில் இருந்து மஞ்சுவிற்கு ஒரே ஒரு ஐடியா வந்திருந்தது! அம்மாவின் கோபத்தை மாற்றும் ஒரு ஐடியா!
மனோஜ் வந்ததுமே அவனிடம் நேராக பேசினாள்.
“மேனேஜர் சார், நீங்க வேலை செஞ்சு ரொம்ப டையர்டா இருக்கீங்களா?”
“அப்படி எல்லாம் இல்லையே! ஏதாவது ஷாப்பிங் போகனுமா மஞ்சு?”
“இல்லை, அதெல்லாம் நானும் சதுவும், வினோவுமே முடிச்சுடோம். நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்.”
“என்ன ஹெல்ப்?”
“எங்கம்மா நான் வேலையை விட்ட எஃபக்ட்ல இருந்து இன்னும் வெளியே வராம என் மேல இன்னும் கொஞ்சம் கோபத்தோட இருக்காங்க. நீங்க அவங்க கிட்ட பேசினீங்கன்னு வைங்க, எல்லாம் சரியா போயிடும்!”