“என்ன சொல்ல?”
“ப்ச்.. இதெல்லாம் நான் சொல்லனுமா?? அத்தை, மஞ்சு பத்தி கவலைப் படாதீங்க! அவளை நான் தான் வேலையை விட சொன்னேன்! அவளை நான் நல்லா பார்த்துப்பேன். என் ஒருத்தன் சம்பளமே எங்களுக்கு போதும். இப்படி எல்லாம் சொல்லி, கொஞ்சம் ஐஸ் மழை தூவி விடுங்க!”
“இவ்வளவு தானே, நானே செய்றேன்... சாரி மஞ்சு உனக்கு பேக்கிங்ல ஹெல்ப் செய்ய முடியலை. வரும் போது பெட்டி எல்லாம் பார்த்தேன்... சாரி டா... ஆபீஸ்ல ரீ-ஸ்ட்ரக்சர் ஆகுது. நான் இருக்க ப்ராஜக்ட் முழுக்க வேற டி.எம் கீழ போகுது. “
“எதுக்கு அப்படி?”
“அதான் சொன்னேனே, மொத்த கம்பெனியுமே ரீ-ஸ்ட்ரக்சர் செய்றாங்க.”
“சரி, கொஞ்ச நாள்ல எல்லாம் செட்டில் ஆயிடும்.”
“தெரியலை pbs! நான் ரிப்போர்ட் செய்யப் போற மேனேஜர் கிட்ட பேசினேன். அவர் சரியாவே பேசலை. ரீ-ஸ்ட்ரக்சரிங்ல அவருக்கு எதோ இம்பாக்ட் ஆகி இருக்குறதா கேள்வி பட்டேன்.”
“ஒ!”
“திரும்ப இவரை இம்ப்ரஸ் செய்ய முதல்ல இருந்து ஸ்டார்ட் செய்யனும்! கடியா இருக்கு!” என்றான் மனோஜ் சோர்வுடன்!
அவளுக்கு ஒரு வித கடுப்பு, அவனுக்கு இன்னொரு விதம்!!!
மஞ்சு கணவனை தேற்றும் விதத்தில் அணைத்துக் கொண்டாள்.
“ஈஸியா எடுத்துக்கோங்க மனோஜ்! நீங்க எப்போவுமே 200% தரவர்ன்னு எனக்கு தெரியும். உங்க