நல்ல ரேட்டிங் வரனும், அதும் இல்லாம அப்போ தான் ப்ரோமோஷன் கன்ஃபர்ம் ஆகும்!”
“ஒ??? உங்களுக்கு ஆல்ரெடி ப்ரோமோஷன் கொடுதுட்டாங்கன்னு நினைச்சேன்?”
“பழைய டி.எம் ரெகமென்ட் செய்து, எல்லா வொர்க் ஆகுற நேரத்துல தான் ரீ-ஸ்டரக்ச்சர் ஆரம்பிச்சது! அதனால டீலே ஆகுது.”
“அதெல்லாம் வந்திடும் மனோஜ். உங்களை மாதிரி 24 பை 7 யார் வேலை செய்வா?? முன்னாடி அஞ்சு நாள் வேலை செஞ்சீங்க, இப்போ எல்லாம் ஏழு நாளும் வேலை செய்றீங்க!”
மஞ்சு புகார் சொல்வதாக மனோஜுக்கு தெரிந்து விடக் கூடாது என்று முடிந்த அளவு இயல்பான குரலில் சொன்னாள்!
ஆனாலும் மனோஜிற்கு புரிந்தது!
“சாரிடா! உனக்கு எப்படி இருக்கும்னு எனக்குப் புரியுது. இப்போ இருக்க புது டீம் செட்டில் ஆகுற வரைக்கும் கொஞ்ச டைம் கொடு! அதுக்கு மேல நாம எல்லாம் ஈஸியா செய்யலாம்...”
“ப்ச்...”
“என்ன செய்ய pbs? நான் இங்கே கிளையன்ட்க்கு வேலை செய்றது தவிர ஆஃப்ஷோர் ரிலேட்டட் வேலையும் செய்ய வேண்டி இருக்கு. அதும் இல்லாம மேனேஜர்ஸ் மீட்டிங் அது இதுன்னும் இருக்கு! எல்லாத்தையும் சரியா செய்ய அஞ்சு நாள் பத்த மாட்டேங்குது! அதனால தான் இப்போ எல்லாம் வீக்என்ட்லேயும் வேலை செய்ய வேண்டி இருக்கு! கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் செய்துக்கோ, அதுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும்!”
மஞ்சுவிற்கு இது மட்டுமில்லை, மனோஜிடம் இன்னொரு முக்கியமான விஷயமும் பேச வேண்டும் என்ற ஆவல் இருந்தது!
அது குழந்தைப் பற்றி...!