(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

இருந்தாலும் கூட மிகவும் விலை அதிகம் தான்!

  

ஹோட்டலில் நிறைந்து இருந்த ஆடம்பரத்தை பார்த்த ஆதித்யாவிற்கு மனதில் குற்ற உணர்வு தோன்றியது. சான்வி கஷ்டப்பட்டு சேமித்த பணம் இப்படி செலவாகிறது! போட்டியில் சிறப்பாக செயல்புரிய வேண்டும் என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

  

அன்று மாலை ஐந்து மணி முதல் போட்டிக்கான நேரடி ரெஜிஸ்ட்ரேஷன் இருந்தது. ஆன்லைன் வழியாக ரெஜிஸ்டர் செய்திருந்தாலும், போட்டியில் பங்குப் பெறுபவர் இன்று நேரடியாக சென்றும் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு மட்டுமான அறிமுக கூட்டம் இருந்தது. தனியாளாக இருப்பவர்கள், டீமாக போட்டியிட விரும்பினால் மற்ற போட்டியாளர்களுடன் பேசி தன்னை அவர்களின் டீமில் இணைத்துக் கொள்ளலாம். அல்லது புதியவர்கள் ஒன்றாக டீம் தொடங்கலாம்.

  

ஆதித்யாவிற்கு அப்படி யாருடனும் டீமாக போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம் இருக்கவில்லை. பெயருக்கு அறிமுக கூட்டத்தில் கலந்துக் கொள்வது என்று தான் யோசித்து வைத்திருந்தான்.

  

அதன் படி ஐந்து மணிக்கு முதல் ஆளாக சென்று போட்டிக்கு நேரடி ரெஜிஸ்ட்ரேஷன் செய்துக் கொண்டான் ஆதித்யா.

  

அந்த வேலையை முடித்ததும் போட்டியாளர்களுக்கான ஸ்பெஷல் ஹாலுக்குள் அவன் செல்ல அனுமதி கிடைத்தது.

  

அங்கிருந்த அலங்காரங்கள், போஸ்டர்களை விட உணவு தான் முதலில் அவனை கவர்ந்தது. அதிக பணம் செலவு ஆகி விடுமோ என்று பயந்து அவன் தனியாக உணவு வாங்கி உண்ணவில்லை. வரும் வழியில் கிடைத்திருந்த பிரெட்டை மட்டுமே சாப்பிட்டு இருந்தான்.

  

இங்கே அன்லிமிட்டட் பப்பே போல உணவு வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

  

அதைப் பார்த்ததும் அவனின் வயிறு மெல்ல சத்தமிட்டது!

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.