“எஸ், ஆனால் எக்ஸ்டன்ட் செய்யலாம்...” என்றான் மனோஜ் நம்பிக்கை ஊட்டும் விதத்தில்.
“ஓகே...” என்று அவர் சொன்ன பதிலிலும் சந்தேகம் இருந்தது...
“ஒன் வீக்ல அப்டேட் செய்றோம்!” என்று இன்டர்வியூ முடிவுற்றப் போது, மனோஜிற்கும் சந்தேகமாக இருந்தது.
ஒரு கம்பெனியில் இருந்து மாறி, வேறு ஒரு புது கம்பெனியில் வேலைக்கு சேரும் போது, விஸா ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அதற்கு கம்பெனி ஆயிரக் கணக்கில் டாலர்கள் செலவழிக்க வேண்டும்! மீண்டும் விஸா நீட்டிக்கவும் அதேப் போல ஆயிரக் கணக்கில் பணம் செல்வழித்தே ஆக வேண்டும்.
சமபளத்துடன், இந்த கூடுதல் செலவை ஏற்க அவர்கள் தயாராக இருப்பார்களா என்ற கேள்வி மனோஜிற்கு வந்திருந்தது!
அவன் நினைத்தது சரி என்றுக் காட்டுவதைப் போல, சில நாட்களில், தற்போது அவனை வேலையில் எடுக்க இயலவில்லை என்ற ஈமெயில் வந்து சேர்ந்தது.
முதல் முறையாக உடனடியாக வேலைத் தேடிக் கண்டுப்பிடிப்பது சுலபமான விஷயம் அல்ல என்பது மனோஜிற்கு புரிந்தது.
அடுத்தடுத்து அவன் விண்ணப்பித்த வேலைகளிலும் இதே கதை தான் நடந்தது! ஒன்று, விசாவில் வேலை செய்பவர்கள் வேண்டாம் என்றார்கள் அல்லது அதிக நாள் விஸா இருப்பவர்கள் தான் வேண்டும் என்றார்கள்!
தொடர் நிராகரிப்புகளால் மனோஜின் மனநிலை மொத்தமாக மாறிப் போனது!
புது வேலை கிடைப்பது தாமதமானதால், மனோஜ் தற்போதையை வேலையில் அமித்தின் கீழே வேலை செய்ய வேண்டி இருந்தது! முன்பு தனக்கு கீழே இருந்தவனின் கீழே வேலை செய்ய வேண்டி இருப்பது மனோஜிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை! அது அவனின்