ஆனால் அவளுக்கு அவன் மீதிருக்கும் அன்பை சோதிப்பதுப் போல வந்த நாட்கள் தான் அது...
மஞ்சு அதைப் பற்றி யோசித்துக் கொண்டு அங்கேயே நிற்க, மனோஜின் கண்கள் எதேச்சையாக அவள் நின்ற பக்கம் திரும்பியது!
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவனின் கண்களில் கேள்வி வந்தது! புருவங்களை ஏற்றி அவளை கேள்வியாகப் பார்த்தான்!
மஞ்சு புன்னகை சிந்தி விட்டு, ஒன்றுமில்லை எனும் அர்த்தத்தில் தலை அசைத்து விட்டு திரும்பி சென்றாள்.
பழைய நினைவுகளால் ஏற்பட்டிருந்த தாக்கம், மனோஜை நேரில் பார்த்து ரசித்ததில்(!!!!) இப்போது முற்றிலுமாக குறைந்துப் போயிருந்தது!
சமயலறையில் தயாராக இருந்தவற்றைப் பார்த்தாள்...
கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிந்து விட்டது... இனி அவள் உடை மாற்றி “ஹோஸ்ட்” ஆக தயாராக வேண்டியது தான் மீதம் இருந்தது!
அதைப் பற்றி நினைத்துக் கொண்டே திரும்பினால், மனோஜ் அவளின் முன்னே வந்து நின்றான்.
“என்ன pbs? ஏதாவது ஹெல்ப் வேணுமா? என்ன கேட்க வந்த?”
மஞ்சு அவனின் காதுகளில் ஹெட்செட் இல்லை என்பதை கவனித்து விட்டு அவன் அமர்ந்திருந்த இடத்தில் எட்டிப் பார்த்தாள்.
“லைன் ஆக்டிவா இல்லை. டென் மினிட்ஸ் ப்ரேக் சொல்லிட்டு வந்தேன். என்ன pbs?”
“எதுவுமில்லை மனோஜ். சும்மா உங்களைப் பார்க்கனும்னு தோணிச்சு, வந்தேன்... குக்கிங்