(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“என் கிட்ட சொல்லிட்டீங்க அக்கா, இனிமேல் ஆதியை பத்தி கவலையே படாதீங்க. அவனை நான் பத்திரமா பார்த்துக்குறேன்.”

  

அக்ஷரா சீரியசாக வாக்குறுதி கொடுக்கவும், ஆதி முதல் முறையாக பேசினான்!

  

“என்ன சான்வி அக்ஷரா கிட்ட போய் இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க? நானே என்னைப் பார்த்துப்பேன். அது இல்லை முக்கியம், காம்பெடிஷன் தான் முக்கியம்!”

  

சான்வி பக்கத்தில் சத்தம் என்னவோ கேட்டது!

  

“ஆதி, ஹெச்.எம் வராங்க. நான் அப்புறம் பேசுறேன்,” என்று பரபரப்புடன் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் சான்வி!

  

ஆதி அக்ஷரா பக்கம் மன்னிப்பு கோரும் பார்வை பார்த்தான்.

  

“அக்கா, ஸ்கூல்ல இருக்கா அக்ஷரா,” என அவன் விளக்கமும் கொடுக்க முயற்சிக்க, அக்ஷரா அவன் பேச்சை தடுத்து நிறுத்தினாள்.

  

“எனக்கே புரியுது ஆதி. இதை எல்லாம் தப்பா நினைக்குறவ நான் கிடையாது. உன் அக்கா நமக்கு விஷ் செஞ்சுட்டாங்க, அப்போ நாம டீமா ரெஜிஸ்டர் செய்யலாமா? ஐ ஆம் வெரி எக்சைடட் அபவுட் இட்!”

  

“உடனே ரெஜிஸ்டர் செய்திடலாம், வா!”

  

“அதுக்கு முன் நம்ம டீமுக்கு நேம் வைக்கணுமே, என்ன வைக்கலாம்???? ஆதித்யா, அக்ஷரா??? ஹ்ம்மம்ம்ம்ம் அக்ஷயா???? டீம் அக்ஷயா??? நல்லா இருக்கா ஆதி?

  

“எனக்கு டீம் பேரு எல்லாம் முக்கியம் இல்லை, அக்ஷரா. போட்டியில கலந்துக்கனும், ஜக்ருதியை நேரா சந்திக்கனும், அது தான் முக்கியம்!”

  

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.