(Reading time: 11 - 22 minutes)
Inspector Then
Inspector Then

தோத்து போயிடுவாங்க. என்ன கெத்தா அவனுங்களை மிரட்டுறீங்க?"

  

"எல்லாம் பழக்கம் ஆகி போச்சு சார். வேதாளத்துக்கு வாழ்க்கை பட்டுட்டு முருங்கை மரம் ஏறாமல் இருக்க முடியுமா, சொல்லுங்க? இருங்க காய்கறி வாங்கிட்டு வரேன், உங்க கூட கொஞ்சம் பேசனும்!"

  

ஷாலினியை வினோதனிடம் விட்டுவிட்டு வேலையை விரைந்து முடித்த சத்யா வினோதனிடம்,

  

“நீங்க ஜீப்ல வந்தீங்களா, பைக்ல வந்தீங்களா?” என விசாரித்தாள்.

  

“ஜீப்ல தான் சிஸ்டர், எதுக்கு கேட்குறீங்க?

  

“ஷாலினிக்காக! நாம பேசிட்டு நடக்கலாம், ஷாலினியை ஜீப்ல அனுப்பிடலாம்,” என்ற சத்யா,  மகளிடம்,

  

"ஷாலினி, நீ ஜீப்புல வா. நான் அங்கிள் கிட்ட பேசிட்டு நடந்து வரேன்" என்றாள்.

  

ஷாலினி மறுக்காமல் ஜீப்பில் ஏறி செல்ல, வினோதனிடம்,

  

"அது என்ன கேஸ் வினோதன்? அந்த ரவுடிங்க ஏதோ பொண்ணு கேசுன்னு சொன்னானுங்க... இந்த கிராமத்தில கூட இப்படி வந்து மிரட்டுற அளவுக்கு, அப்படி என்ன கேஸ் அது?" என விசாரித்தாள் சத்யா.

  

"எல்லா ஊருலேயும் நல்லவங்க கெட்டவங்க சேர்ந்தே தான் இருக்காங்க சிஸ்டர்!"

  

"தத்துவம் எல்லாம் அப்புறமா கேட்டுக்குறேன். விஷயத்தை சொல்லுங்க!"

  

"ராஜசுலோச்சனான்ற பேர் கேள்வி பட்டு இருக்கீங்களா??"

  

"இந்த ஊர்ல எதோ ராஜ பரம்பரையை சேர்ந்தவங்க இருக்காங்கன்னு கேள்வி பட்டேன்.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.