(Reading time: 11 - 22 minutes)
Inspector Then
Inspector Then

"உங்க ப்ரெண்டும் அப்படி தான்... உங்க வைப் கிட்ட மட்டும் சொல்லி இருப்பார்!" என்றாள் சத்யா வீட்டின் கேட்டை திறந்தபடி.

  

வினோதன் இன்னும் சத்யா எபக்ட்டில் இருந்து வெளி வராமலே அவளை தொடர்ந்தான்!!!

   

*********************

   

"னக்கு அசிங்கமா இருக்கு! அதுவும் என் பேரை சொல்லி இந்த கேசை வேண்டாம்னு சொல்லி இருக்கீங்க?"

  

கணவனை எரித்து விடுவது போல் பார்த்து முறைத்தாள் சத்யா.

  

"சத்யா, இதெல்லாம் என் வேலை விஷயம்," என்றான் தேன் அமைதியாக.

  

"உங்க வேலை விஷயமா இருந்தா, நீங்க என் பெயரை பயன்படுத்தி இருக்க கூடாது!"

  

"இல்லைம்மா, இது..."

  

"பாவம்ங்க அந்த பொண்ணு! அந்த குடும்பமே இப்போ நடு வீதியில சிதறி போயிருக்கு. என்ன நடந்திச்சுன்னு தெரிஞ்சுக்க தானே ஆசை படுறாங்க? விசாரிச்சு சொல்லுங்களேன். வீட்டை விட்டு வெளியே போறோம். திடீர்னு ஒரு லாரி வந்து இடிச்சா என்ன ஆகும்? உயிர் போயிடும்! போற உயிர் எப்போ போகும்னு தெரியாது! இந்த மாதிரி எல்லாம் மிரட்டலுக்கு பயந்தா எப்படி? அப்போ இந்த வேலையை விட்டுட்டு வேற வேலை தேடிக்கோங்க..."

  

"அப்படியில்லை சத்யா, எனக்கு நிறைய கேஸ் வேலை இருக்கு?"

  

"ஆமாம் பெரிய கேசு, எனக்கு தெரியாது! அந்த நகை திருட்டு கேசும், பணம் கேசும் தானே? அதை எல்லாம் அபினவ் கிட்ட கொடுத்து நடத்த சொல்லுங்க. அதுக்கு எல்லாம் நீங்க தேவையில்லை!"

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.