(Reading time: 11 - 22 minutes)
Inspector Then
Inspector Then

  

"என்னது? அவர் மாட்டேன்னு சொல்லிட்டாரா?"

  

"ஆமாம் சிஸ்டர். ரொம்ப விவகாரமான கேஸ் இது. இந்த ஊர் எம்.எல்.ஏ, எம்.பி எல்லார் கிட்டே இருந்தும் ரொம்ப ப்ரெஷர்... அப்புறம் இப்போ பார்த்தீங்கள்ள அது போல மிரட்டல் வேற..."

  

"ஆனாலும்???"

  

"தேன் கிட்ட உங்களையும் ஷாலினியையும் சொல்லி மிரட்டி இருப்பாங்க போல! சாதாரணமா அவன் இதுக்கு எல்லாம் அசர மாட்டான். ஆனால் உங்களுக்கு இந்த ஊரு ரொம்ப பிடிச்சிருக்காமே, அமைதியான வாழ்க்கை வேணும், இனிமேல் ட்ரான்ஸ்பர் வேண்டாம்னு சொன்னீங்களாம், அதுக்காக அவன் எடுத்துக்கலை!"

  

"அவரை!!!” என பல்லைக் கடித்த சத்யா, தொடர்ந்து, “அவர் கிட்ட அப்புறம் பேசுறேன்... உங்க வைப் எப்படி இருக்காங்க?" என்றுக் கேட்டாள்.

  

"அப்படியே தான் இருக்கா, எப்போவும் போலே புலம்பிட்டே இருக்கா! தேன் அந்த விதத்துல ரொம்ப லக்கி இப்படி நச்சு செய்ற மனைவி அவனுக்கில்லை! அவன் புலம்பி நான் கேட்டதேயில்லை!"

  

"உங்களுக்கு ரொம்ப தெரியுமாக்கும்! போய் உங்க வைப் கிட்ட கேட்டுப் பாருங்க!"

  

"ஏன்?"

  

"எல்லாம் உங்க ஆம்பளைங்க சைக்காலஜி தான்! சொந்த மனைவியை பத்தி மத்த பொண்ணுங்க கிட்ட புலம்புற வேலை தானே உங்க எல்லோருக்கும்?"

  

"ஐயோ சிஸ்டர் நான் அப்படி எல்லாம் இல்லை! உங்க கிட்ட மட்டும் தான் சொன்னேன்."

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.