கண்கள் மின்ன, உதட்டில் சிரிப்பு ஜொலிக்க அவள் கேட்கவும், மனோஜ் தானாக அவளின் உதட்டில் மெல்ல முத்தமிட்டான்...
“யூ ஆர் அன்பிலிவபில் pbs!!”
“நீங்க போய் உங்க வேலையையும், டின்னரையும் முடிச்சுட்டு சீக்கிரமா வந்து சேருங்க.. நாம நம்ம வீக் என்டை ஸ்பெஷலா ஸ்பென்ட் செய்வோம்...”
மஞ்சு அவனின் முகத்தில் விரல்களால் வருடிக் கொண்டே சொன்ன விதத்தில் மனோஜிற்கு வேறு எதுவும் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை...
“எத்தனை மணிக்கு டின்னருக்குப் போறீங்க??” என்று மஞ்சுவே கேட்டாள்...
“டைம் எல்லாம் செட் செய்யலை... ஏன் கேட்குற...?”
“சும்மா தெரிஞ்சுக்க தான்... நீங்க டின்னருக்கு கிளம்பும் போது முடிஞ்சா எனக்கு போன் செய்ங்க...”
“சரி பேசுறேன்... நீயும் நேரத்துக்கு சாப்பிடு...”
மஞ்சு தலையை ஆட்டவும், அவளின் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு கிளம்பினான் மனோஜ்.
ஆபீஸில் நேரம் மின்னல் வேகத்தில் பறந்தது. சரவணன் மட்டும் தனியாக மதியத்திற்கு மேல் அலுவலகம் வந்தான். சேஷாத்ரி மற்றும் மனோஜுடன் பொதுவாக நிர்வாகம் தொடர்பாக பேசினான். மூவருமாக பல திட்டங்களை வகுத்தார்கள்.
நான்கு மணிக்கு மேல் அவர்களின் மீட்டிங் முடியவும், தன் க்யூப் நோக்கி சென்ற மனோஜுடனே சென்றான் சரவணன்.