(Reading time: 10 - 19 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

கிட்ட சொல்லாமல் எதுவுமே செய்ததில்லை....’

  

அவள் கவலையுடன் அவனைப் பார்த்தாள்.

  

ஹேய் நீ பயபடாதே, நான் அவங்களை சமாதானப் படுத்துறேன்....! சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.... இந்த ரூம் உனக்கு பிடிச்சிருக்கா இல்லை வேற ஏதாவது சேஞ்சஸ் செய்யனுமா?”

  

பிடிச்சிருக்கு....”

  

நீ டிரஸ் மாத்திட்டு வரேனா வா.... கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்....”

  

சரி என்று ஏற்றுக் கொண்டு, அவள் முகம் கழுவி உடை மாற்றி வந்த போது அவனும் உடை மாற்றி இருந்தான்....

  

ஹேய் இந்த எல்லோ சாரீயும் உனக்கு நல்லா இருக்கு.... எல்லா கலருமே உனக்கு செட் ஆகுது...” என்றான் அவன் ரசனையுடன்...

  

ஹ்ம்ம்...”

  

வா, வந்து உட்கார்....”

  

சிறிய இடைவெளி விட்டு அவனின் அருகே அமர்ந்தாள் அவள்.

  

ஒரு நாள்ல என்ன எல்லாமோ நடந்திருச்சு. இப்போ யோசிச்சு பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு....”

  

ம்ம்ம்ம்...”

  

ஆனால் சந்தோஷமா இருக்கேன் நான்.... நீ என் மனைவி ஆனதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்....”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.