தொடர்கதை - மானசா தீவு – 08 - விஜேஜி
அடுத்து ஒரு நாளில், தன் மனைவிக்கு முதல் குழந்தை பிறக்கும் போது எந்த ஒரு விசேஷமும் செய்யவில்லை என்று, மாதவன்,சஹானாவின் அம்மாவிடம் ஃபோனில் அழைத்து, என்ன செய்ய வேணடும் என்று கேட்டு தெரிந்துக் கொண்டு எல்லா ஏற்பாடும் செய்தான். அவர்கள் வீடு பெரிதாக, ஒரு மாளிகை போல் இருந்ததால் அங்கேயே, விசேஷத்திற்கான ஏப்பாடு செய்திருந்தான் மாதவன்.
அவளை அழைத்துச் சென்று புடவைகள், வைரத்தில் செட், குழந்தைகளுக்கும் நகைகள், டிரஸ் என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.
" இதெல்லாம் எதுக்கு நாயர்?" என்று அவள் கேட்கவும்,
" நம்ம கல்யாணம் ரொம்ப சிம்பிளா உங்க வீட்ல தாலியை கட்டி கூட்டிண்டு வந்துட்டேன், அதற்குப் பிறகு , நம்ம முதல் குழந்தை, அடுத்து அடுத்து, பிறந்த போதும் நான் உன்னோட இல்லை, உனக்கு எந்த ஒருவிசேஷமும் செய்யல, இப்போ எல்லாவற்றையும் சேர்த்து, இந்த விழா செய்யணும்னு முடிவு செய்துட்டேன், மானசி. " என்று கண்கள் கலங்க அவளிடம் கூறினான்.
அவள், அவ்னை, தான் வேதனைப் படுத்தி விட்டோம் என்று புரிந்துக் கொண்டு, " அதுக்கு, நீங்க மட்டும் பொறுப்பில்லை, ஞானும் தான் நாயர்" என்று கூறி அவன் கண்களை துடைத்துக் விட்டாள்.
அவன், அம்மாவை அழைத்த போது, தன்னால் வர முடியாது என்று கூறிவிட்டார். ஆனால், தன் நண்பர்கள், மானாசாவின் உறவினர், நண்பர்கள் என்று எல்லோரையும் அழைத்திருந்தார் மாதவன்.
நூறு பேர் கொண்ட போட்டை கரைக்கு விட்டிருந்தான் மாதவன். இதை பார்த்துக் கொள்ள, தன் அசிஸ்டன்ட் அந்தோனியும், கார்த்திக்கும் அவர்கள் டீம் அமைத்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள்.