(Reading time: 12 - 24 minutes)
Manasa Theevu
Manasa Theevu

தான் இல்லாமல், தன் பெற்றவர்களும் இல்லாமல் தனியாக எப்படி சமாளித்தாள் என்று நினைத்து, நினைத்து வேதனைப் பட்டான். எப்படி இப்படி தனித்தனியாக விட்டுவிட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது என்று அவனை திட்டிக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

  

டாக்டர் அவளை அட்மிட் செய்துவிட்டு,” இன்னும் ஒரு வாரம் இருக்கிறது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று கூறவும் மாதவன் தானும் அவள் அருகே இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

  

அவரோ லேபர் வார்டுக்கு கூட்டிச் செல்லும் வரை இருக்கலாம், அதற்குள் நீங்கள் வர முடியாது என்று கூறிவிட்டார்.

  

அவள் கையைப் பிடித்து கொண்டு இருந்தான் மாதவன். அவள் வலியில் வேதனைப் படுவதை பார்த்து, அவனும் வேதனைப் பட்டான்.

  

லேபர் வார்டு ரெடியானதும், அவளை கூட்டிச் சென்றனர். அவள் கையை விடவே மனமில்லை மாதவனுக்கு, அவளுக்கும், அவன் கையை விடுவிக்க மனது வரவில்லை.கண்களில் கண்ணீரோடு வெளியே வந்தான், அங்கே கவலையோடு, மானசாவின் அம்மா உட்கார்ந்திருந்தார், விஷயம் அறிந்து கார்த்திக்கும் வந்தான்.

  

"வாடா கார்த்திக், "  என்றார் அம்மா

  

" அத்திம்பேர், அக்கா எப்படி இருக்கா?" என்று கேட்டான்.

  

லேபர் வார்டில் இருக்கா. உங்க அக்கா ரொம்ப வலியில துடிக்கராடா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று வேதனையுடன் கூறினான்மாதவன்.

  

கார்த்திக், ஆறுதலாக அவன் தோளில் கை வைத்தான்.

  

" ஞான் போய் காப்பி வாங்கி வரட்டா, அத்திம்பேர்" என்று கேட்டான், கார்த்திக்.

  

2 comments

  • இந்த கதையை எழுத்தாளர் எப்படி சுபமாக முடிக்க போறாங்கனு காத்திட்டு இருக்கேன்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.