(Reading time: 12 - 24 minutes)
Manasa Theevu
Manasa Theevu

அவர் சொல்லியபடி ,சந்தனம் தடவி, நெற்றியில் குங்குமம் வைத்து, தலை வகிட்டிலும் குங்குமம் வைத்துவிட்டு, தலையில் பூவை சூடிவிட்டு, அவள் அம்மா வளையல் போடச் சொன்னதும், தன் பாக்கெட்டிலிருந்து ஆறு வைர

  

வளையல்களை எடுத்து அவள் கைகளில் போட்டுவிட்டான் பின் அட்சதை தலையில் தூவி, தலையை தடவி அவளுக்கு ஆசி கூறிவிட்டு,அவள் தலையில் ஒரு முத்தம் வைத்து விட்டு,  அங்கேயே அருகில் நின்றான். தன் மனைவி சந்தோஷ முகத்தைக் கான.

  

அவள் அப்பாவும் இதை எல்லாம் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தார், கொஞ்சம் வெட்கமாகவும் உணர்ந்தார். தன் பெண்ணை இத்தனை வருடம் பிரித்து வைத்ததை நினைத்து வருத்தப்பட்டார். இந்த குழந்தை மனது எத்தனை வேதனைப் பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அவர் மகளின் மகிழ்ச்சியை பார்த்தார், அவள் கணவன் அவளுக்கு வளையல்கள் போட்டுவிடும் போது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து

  

பெருமிதமாய் இந்தார். இந்த பையன் எவ்வளவு அன்போடு தன் மகளை பார்த்துக் கொள்கிறான், இவனை விட அன்பான ஒருவனை அவள் வாழ்ள்க்கை துணையாக தன்னால் பார்த்திருக்க முடியுமா என்ன,' என்று நினைத்தார்.

  

அக்ரஹார பெண்கள் எல்லாம் அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்தார்கள்.

  

எல்லோரும் சாப்பிட்டு கிளம்பினார்கள். வந்த ஒவ்வொரு பெண்களுக்கும் பட்டுப்புடவையை பரிசாக கொடுத்து அனுப்பினார்கள் விசேஷம் அருமையாக நடந்தேறியது .

  

மானசா வெகுவாக களைத்திருந்தாள். அம்மாவையும் அப்பாவையும் அங்கேயே இருக்க கூறியிருந்தான் மாதவன்.

  

அவர்களும் அங்கேயே தங்கிவிட்டிருந்தனர். ஒரு வாரத்தில் அதி காலையில்,அவளுக்கு பிரசவ வலி எடுத்தது மாதவன் தவித்துப் போய் இருந்தான்.

  

மனதினுள், அவனை வெகுவாக திட்டிக் கொண்டிருந்தான். எப்படி இவள் ஐந்து குழந்தைக,ளை

2 comments

  • இந்த கதையை எழுத்தாளர் எப்படி சுபமாக முடிக்க போறாங்கனு காத்திட்டு இருக்கேன்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.