(Reading time: 12 - 24 minutes)
Manasa Theevu
Manasa Theevu

" இல்லை, எனக்கு வேண்டா, அம்மைக்கு வாங்கிக் கொடு, அப்படியே அம்மைக்கு டிபனும் வாங்கி வா" என்று கூறினான் மாதவன்.

  

" இருக்கட்டும், எனக்கு இப்போ ஒன்றும் வேண்டா, மானசா நல்லபடி பிரசவிக்கட்டும், பின்னேபார்க்கலாம்."

  

" இல்லை அம்மே, சரியான உறக்கம் கூட இல்லை, மானசாவிற்கு பிரசவம் ஆனவுடன், நீங்கள் அவளோடு இருக்கணும் அல்லோ, கார்த்திக் அம்மையை காண்டீனுக்கு கூட்டி போ, நல்லா சாப்பிட்டிட்டு வரட்டும், கேட்டியோ?"

  

கார்த்திக்கோடு கிளம்பி சென்றார் அம்மா.

  

அப்போது உள்ளிருந்து ஒரு நர்ஸ் வந்து குழந்தை பிறந்து விட்டதாக பெண் குழந்தை என்றும் கூறினார். சிறிது நேரத்தில் வார்டில் கொண்டு விடுவோம் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

  

இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாலும் எப்போது மனதை வார்டில் கொண்டு விடுவார்கள் என்று காத்திருந்தான் மாதவன்.

  

சிறிது நேரத்தில் அம்மாவும் கார்த்திக்கும் வந்ந்தனர், விஷயத்தை அவர்களிடம் கூறினார். மூன்று பேரும் காத்திருந்தார்கள் அப்போது மானசாவை ஸ்ட்ரெச்சரில் அவர்கள் இருந்த ரூமுக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

  

அவள் மிகவும் சோர்வாக இருந்தாள். மாதவன் அவளருகில் உட்கார்ந்து அவள் தலையை வருடிக் கொண்டிருநதான்.

  

அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

  

" என்ன இது நாயரே, எதுக்கு கரையறது?"  என்று அவன் கண்ணீரை துடைக்க முனைந்தாள், மானசா.

2 comments

  • இந்த கதையை எழுத்தாளர் எப்படி சுபமாக முடிக்க போறாங்கனு காத்திட்டு இருக்கேன்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.