(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"ம்ம்ம்...??"

  

"அண்ணனுக்கு அப்பாவுடைய டெக்ஸ்டைல் பிஸ்னஸிலேயே ஆர்வம் இருக்கு. அதனால அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் இப்போ புதுசா தொழில் ஆரம்பிக்கனும்னா முதலீடுக்கு பணம் வேணும் தானே? நான் மட்டும் அப்பா அம்மா கிட்ட எனக்காகன்னு தனியா பணம் கேட்டு பிஸ்னஸ் ஆரம்பிச்சா, நிறையக் குழப்பம் வர வாய்ப்பு இருக்கு. இப்போ அமைதியா இருக்கிற குடும்பத்தில என்னால புயலடிக்கக் கூடாதுன்னு தான் யோசிக்கிறேன்..."

  

"ஹ்ம்ம்ம்... அதுவும் சரி தான்! நீங்க உங்க அண்ணன், அண்ணி, அம்மா, அப்பா, தங்கை எல்லோர் கிட்டேயும் நேரா பேசிப் பார்க்கலாமே, அவங்கப் புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்."

  

"எல்லோருக்கும் என் ஆசைத் தெரியும்... நான் இப்போ உங்க கிட்ட விளக்கத்தை எனக்கு சொன்னதே அம்மா தான். யோசிச்சுப் பார்த்தால் அவங்க சொல்றதும் சரி தான்..."

  

"ஓ!!!! உங்க அண்ணா பத்தி தெரியலை, ஆனால் உங்க அண்ணி அப்படி குழப்பம் எற்படுத்துறவங்களா எல்லாம் இல்லை... நீங்க ஏன் பேசாம பாங்க்ல லோன் ஏதாவது முயற்சி செய்யக் கூடாது?"

  

மீண்டும் பாரதி பக்கம் ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு,

  

"அதில் கொஞ்சம் சிக்கல் இருக்கு பாரதி. நான் போய் லோன் வாங்கினேன்னு வைங்க, உடனே, நரேந்திரன் குடும்பத்தில குழப்பம், பாரு அவருடைய மகன் வெளியே பாங்க்ல லோன் வாங்குறான்... அப்படி இப்படின்னு கதைக் கட்டி விடுவாங்க. எந்த காரணத்திற்காகவும் குடும்பத்துக்கு கெட்டப் பெயர் வர மட்டும் நான் விட மாட்டேன்..." என்றான் விவேக்.

  

"புரியுது... நீங்க சொன்ன மாதிரி இது சிக்கலான விஷயம் தான். உங்க அம்மா அப்பா கிட்ட திரும்பப் பேசி பாருங்க..."

  

"பார்ப்போம்... அப்புறம் நீங்க எப்போ அடுத்தக் கதை எழுதப் போறீங்க?"

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.