(Reading time: 11 - 22 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

அவன் ஆம் என்று தலை அசைக்கவும்,

  

"அக்கா, அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல தான் இருந்தாங்க. ஆனால் இந்து மேடம் அவங்களுக்கு இந்த டிசைன் வரைவதில் இருக்கும் ஆர்வம் பத்தி தெரிஞ்சதால, அவங்க கிட்ட பேசிட்டு இங்க போட்டாங்க. இங்க இருக்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் ரொம்ப ஷாக் தான். அப்போல்லாம் இந்து மேடத்தை ரகசியமா திட்டுவாங்க.." என்று அதிக விபரம் பகிர்ந்தான் குமார்.

  

சஞ்சீவின் முகம் கடு கடுத்தது. அதை கவனியாமல் பேசிக் கொண்டே போனான் குமார்.

  

"ஆனால் இப்போ கேட்டு பாருங்க... அப்படியே புகழ்ந்து தள்ளுவாங்க. அது தான் இந்து மேடம். எங்க என்ன திறமை இருக்குன்னு பார்த்து நல்லா பயன் படுத்திப்பாங்க."

  

"ஏன் குமார் இப்படி எங்க மானத்தை வாங்குறீங்க?" என்று ரகசிய குரலில் அவனை கண்டித்தாள் ஒருத்தி.

  

சஞ்சீவ் அதை கண்டுக் கொள்ளாதது போல் திரும்பினான்.

  

"ஏன் சார், இந்து மேடத்தை பத்தி தப்பா ஒரு வார்த்தை சொன்னால் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது?" என்ற மெல்லிய குரலில் திடுக்கிட்டு திரும்பினான். அவன் பின்னே நின்று கொண்டிருந்த கமலா அவனை பார்த்து புன்னகைத்தாள். ஒரு சில வினாடிகளில் முக மாறுதலை மாற்றி விட்டதாக நினைத்தானே... ச்சே இந்த வயதானவர்கள் இருக்கும் போது முகத்தை கல் போல தான் வைத்துக் கொள்ள வேண்டும் போலும்.

  

"அதெல்லாம் இல்லை..." என்று அவன் சமாளிக்கும் போதே அங்கு வந்து அவனை காப்பாற்றினாள் இந்து.

  

"என்ன சஞ்சீவ் பேசினீங்களா?" என்றவள், கமலா பக்கம் திரும்பி,

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.