(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

இப்போ எல்லாம் எங்கே போகனும்னாலும் டிரைவர் அண்ணா கூட தான் போறது..."

  

"ஒ... புரியுது...! அது என்ன உங்க கீழே வேலை செய்றவங்க எல்லோரையும் அண்ணா, அக்கான்னு கூப்பிடுறீங்க?"

  

"எல்லோரையும் இல்லை... ஜெயா அண்ணா எங்க வீட்டிலேயே ரொம்ப நாளா இருக்கார். அம்மாக்கு வீட்டில வேலை செய்றவங்களை அக்கா அண்ணான்னு கூப்பிட்டா தான் பிடிக்கும்... ஆஃபீஸ்ல, கமலா அக்கா விஷயம் வேற... அவங்க எனக்கு கொஞ்சம் க்ளோஸ்.. அதனால தான் அப்படி அக்கான்னு கூப்பிடுவேன்..." என்றாள் இந்து அவளின் வழக்கமான புன்சிரிப்புடன்.

  

ஆர்டர் எடுக்க வந்தவரிடம் இருவரும் கேப்புசினோ (cappucino) ஆர்டர் செய்தார்கள். சொல்லும் போது எடுத்து வந்தால் போதும் என்று சொல்லி அனுப்பினாள் இந்து.

  

"சொல்லுங்க சஞ்சீவ், உங்களுக்கு குமார் அப்புறம் அங்கே ஆபீஸ்ல இருந்த எல்லோர் கிட்டயும் பேசினதில ஏதாவது தோணிச்சா?"

  

"ம்ம்ம்... உங்க employees எல்லாம் உங்க மேலயும் உங்க அம்மா அப்பா மேலயும் ரொம்ப மரியாதையும் விசுவாசமும் வச்சிருக்காங்க... இதுக்காக தானே குறிப்பா குமார் கிட்ட என்னை பேச சொன்னீங்க...?"

  

"எஸ், அதுவும் ஒரு காரணம் தான்... இன்னும் நிறைய காரணங்கள் சொல்லலாம்... உங்க வீட்டில எல்லோரும் நீங்க இப்படி ஒரு ஹாஸ்பிட்டல் வாங்கி நிர்வாகம் செய்வதைப் பத்தி என்ன நினைக்குறாங்கன்னு எனக்குத் தெரியும்... ஆனால், எனக்கு இது தப்பா தெரியலை... இந்த காலத்திலயும் நல்ல தரமான மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்குதுன்னு சொல்ல முடியாது... ஸோ இதை தப்புன்னு சொல்ல முடியாது... ஆனால், நீங்க இப்படி இதுல இன்வெஸ்ட் பண்ணிட்டு எனக்கும் அதுக்கும் சம்மதம் இல்லைன்னு இருக்கிறது தப்பு.. "

  

சஞ்சீவ் அமைதியாக அமர்ந்திருக்கவும், இந்துவே தொடர்ந்தாள்.

  

"படிக்கிற காலத்தில இருந்தே எனக்கும் பிசினஸ் மேல ரொம்ப இண்டரஸ்ட். படிச்சு முடிச்ச

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.