(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

உடனேயே எங்க எஸ் எ இன்டஸ்ட்ரீஸ் ல போய் வேலை செய்யணும்னு ரொம்ப ஆசை. ஆனால் நான் ஆஃபீஸ் போன முதல் நாள் அப்பா என்கிட்டே சொன்னார்,

  

இந்து, இது உன் அப்போவோட கம்பெனி தான்.. ஆனால் அதனால நீ முதல் நாளே இந்த எம்.டி சேர் உக்கார நினைக்க கூடாது. முதல்ல இங்கே ஆஃபீஸ்ல எல்லாம் எப்படி நடக்குதுன்னு கத்துக்கணும்... நம்ம கீழே வேலை செய்றவங்களைப் புரிஞ்சுக்கணும்.. அதுக்கு அப்புறம் நானே உனக்கு இந்த பதவியை தரேன்...

  

அப்படின்னு சொன்னார்..."

  

பழைய நினைவுகளில் இந்துவின் குரல் தழுதழுத்தது....

  

"ரெண்டு வருஷம் இங்க சென்னைல இருக்கிற எல்லா டிபார்ட்மென்ட்லையும் ஒரு மாசம், ரெண்டு மாசம்ன்னு இருந்து வேலைக் கத்துக்கிட்டேன்...   இங்க இருக்குறவங்கள பத்தியும் மனசில பதிய வச்சுக்கிட்டேன்... அப்புறம் அப்பா திடீர்ன்னு விபத்தில தவறினப்போ என்னை எம்.டி பதவிய ஏத்துக்க சொன்னாங்க..."

  

இந்து சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அவள் மன நிலை புரிந்தவனாய் சஞ்சீவும் அமைதியாய் இருந்தான்.

  

சில நொடிகளுக்குப் பிறகு இந்துவே தொடர்ந்துப் பேசினாள்.

  

"ஸோ, என்னோட தனிப்பட்ட அனுபவத்தில இருந்து சொல்லனும்னா... நீங்க முதல்ல உங்க ஹாஸ்பிட்டல்ல பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும்.. எத்தனை டாக்டர்ஸ் இருக்காங்க? அவங்க speciality என்ன... அவங்க qualification என்ன? எவ்வளவு வருஷமா அங்கே வேலை செய்றாங்க,  அதுக்கு முன்னாடி அவங்க experience என்ன? எத்தனை நர்ஸ், வார்டு பாய்ஸ் இருக்காங்க... இப்படி எல்லாம் தெரிஞ்சுக்கோங்க... எவ்வளவு நேரம் out patients பார்க்கிறாங்க? எவ்வளவு நேரம் விசிட்டர்ஸ் அலோ பண்றாங்க... அப்புறம் பாதுகாப்பு தொடர்பா எல்லாம் சரியாய் இருக்கா...fire extingushers எல்லாம் இருக்கா? ஷிஃப்ட் எப்படி மாத்துறாங்க? நோயாளிகளின் குறையை கேட்க ஏதாவது மீன்ஸ் இருக்கா... இப்படி சொல்லிட்டே போகலாம்... உங்களுக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.