”என் பேரு கூட உனக்குத் தெரியலை ஆனா ஒவ்வொரு முறையும் என் கல்யாணம் நிக்கறப்ப உன் பேர்தான் ஒலிக்கும், என் மனசுல ஆழமா பதிஞ்சிப் போனது உன் பேர் மட்டும்தான், அந்த பேரை கூட நான் வெறுக்கறேன் உன்னையும்தான்” என பேச அவனுக்கு கஷ்டமாகிப் போனது, என்ன பேசுவது, என்ன செய்வது என தெரியாமல் கைகட்டி அமைதியாக நின்றுவிட்டான்.
அவளோ
”நடந்ததுக்கு நீ காரணம் இல்லைதான் ஆனா, ஒருவகையில நீயும் ஒரு காரணமாயிட்ட, உன்னால என் வாழ்க்கை இப்ப கேள்விக்குறியா இருக்கு, என் அப்பா தப்பான முடிவெடுத்து உன்னை வெட்டிட்டா, அவரு ஜெயிலுக்கு போயிடுவாரு, நான் அநாதையிடுவேன் இல்லை உன்னை கொல்ல முடியாம என் வாழ்க்கை இப்படியாயிடுச்சேன்னு நினைச்சி அவர் வருத்தப்பட்டு என்னை அநாதையா விட்டு இறந்துப் போயிட்டா என் கதி என்ன”
என கேட்க அவனுக்கு இப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது
”உங்கப்பா ஜெயிலுக்கும் போக மாட்டாரு, இறந்தும் போகமாட்டாரு, தப்பு என் மேலதானே, நான் சந்நியாசியா ஆகறதும் உனக்கு நடந்த அநீதிக்கு எனக்கு மரண தண்டனை கிடைக்கறதும் ஒண்ணுதான் வேணும்னா நான் என் மரணத்தை ஏத்துக்கறேன்”
”பத்தாது”
”என்ன பத்தாதா நான் மரணதண்டனையை ஏத்துக்கறேன்னு, சொல்றேன் பத்தாதுன்னு சொல்ற”
”உண்மைதான் இது பத்தாது, எனக்கு நடந்த அநீதிக்காக நான் பட்ட கஷ்டம், கவலை, வருத்தம், எங்களோட கண்ணீர், எங்களுக்கு நடந்த அவமானம் இதுக்கெல்லாம் உன்னோட மரணம் தீர்வாகாது, உனக்கென்ன நீ ஒரு நொடியில இறந்துடுவ, அதுக்கு அப்புறம் என்னாகும், என் வாழ்க்கை மாறும்னு நினைக்கிறியா இப்பவே என் கல்யாணம் நிக்குது,