(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்னவோ போ நீ சந்நியாசி ஆன பின்னாடி என்னாவியோன்னு நினைச்சி கவலைப்பட்டிருக்கேன் ஆனா, அதை விட பெருங்கவலை இப்ப நீ சம்சாரியாகி என்னாவியோன்னு நினைச்சிதான்பா”

  

”எனக்கே கொடுமையா இருக்கு, நீ வேற போ இங்கிருந்து” என சொல்ல அதே நேரம்

  

”யாராவது மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பால் பழம் கொடுங்க” என காவேரியின் குரல் சத்தமாக ஒலிக்க திடுக்கிட்டு அவளைப் பார்த்தான் கொம்பன்

  

”பாலு பழமா வேணாம், அதுல கூட எதையாவது திட்டம் தீட்டியிருப்பா” என நினைத்தவன்

  

”நடந்தது கல்யாணமே இல்லை அது ஒரு தண்டனை எதுக்காக கல்யாண சம்பிரதாயங்களை செய்யனும் வேணாம்” என்றான் அதைக்கேட்ட காவேரியோ

  

”இதப்பாரு இது என் வீடு, இங்க அதிகாரம் பண்றது, முடிவு எடுக்கறது எல்லாமே நான்தான், வந்து என் பக்கத்தில உட்காரு வா” என அழைக்க அவனுக்கு கோபமாக இருந்தது

  

”முடியாது நான் வரமாட்டேன்”

  

”அதுக்காக உன்னை தேடி நான் வருவேன்னு நினைச்சியா, இப்ப நீ வரப்போறியா இல்லையா”

  

”முடியாது”

  

என சொல்ல அவளோ அவனை ஏற இறங்க பார்த்து இளப்பமாகச் சிரித்தாள்

  

”என்னத்துக்கு இப்ப இவள் சிரிக்கறா, ஏதோ சதி பண்றா போல இருக்கே” என நினைத்தான். காவேரியோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.