(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அவன் கிடக்கறான்மா அவனோடது எல்லாம் ஒரு பேச்சா சொல்லு, நீ எங்க மருமகள் இனி நீ என்ன சொல்றியோ அதுதான் நடக்கும்”

  

”ஆமா நீங்க இருக்கறப்பவே அவர் என் பேச்சைக் கேட்கலை, நீங்க இங்கிருந்து போன பின்னாடி அவர் பாட்டுக்கு வேற வழியா வெளிய போய் சந்நியாசி ஆயிட்டா என் நிலைமை என்னாகிறது சொல்லுங்க மாமா, மறுபடியும் என் வாழ்க்கை கேள்வி குறியாயிடுமா சொல்லுங்க அத்தை”

  

”சே சே இல்லைம்மா இல்லை நாங்க எங்கயும் போகலை, என் பையன் எப்படி இந்த வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கானோ அதே போல நாங்களும் இங்கயே இருக்கோம், உன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்காம பார்த்துக்கறது, எங்க பொறுப்பு, இப்ப உனக்கு என்ன வேணும் அதைச் சொல்லும்மா”

  

”பாலு பழம் தர்ற சம்பிரதாயம் செய்யனும் மாமா அத்தை” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு உடனே அவர்கள் அதை செய்ய கிளம்ப நடப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் வாய் பிளந்தபடி நின்றிருந்த கொம்பனை கண்டு கணக்குபிள்ளை வாய் பொத்தி சிரிக்க காவேரிக்கும் சிரிப்பாக இருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு

  

”கொம்பா வா வா இங்க வந்து உட்காரு வா” என அழைக்க அவனோ கோபமுடன் அவளை நெருங்கி அவள் பக்கத்தில் அமராமல் இன்னொரு இருக்கையில் அமர்ந்து

  

”என்ன நீ என்னை பேர் வைச்சி கூப்பிடற, இது சரியில்லை முறைப்பொண்ணே, ஆம்பளைங்களை பேர் வைச்சி கூப்பிடக்கூடாது, உறவுமுறை வைச்சிதான் கூப்பிடனும்“

  

”உன்னையெல்லாம் அன்பா ஆசையா மாமான்னு கூப்பிடுவேன்னு நினைச்சியோ, கனவுகினவு கண்டு வைச்சிடாத நிஜத்தில கூட அப்படியொரு சம்பவம் நடக்காது”

  

”அது தெரிஞ்ச கதைதானே இருந்தாலும் நான் உன்னை விட பெரியவன்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.