(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

கொம்பன் கூற அதை யாருமே நம்பவில்லை

  

”அப்புறம் சொல்றாரு, அவரு வேலைக்கு போறாராம் நாய்களுக்கு ட்ரெயினிங் தரனுமாம், நாய்களோட பழகி பழகி நாய் புத்தி வந்துடுச்சி போல அதான் வெறிபிடிச்ச நாய் போல என்கிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கறாரு, எப்படிதான் இந்த நாய்புத்தி உள்ளவரோட நான் வாழப்போறேன்னு தெரியலையே, இப்பவே அவர் உடம்புல நாய் வாசனை வருது, நாய்களோட முடியெல்லாம் அவர் துணியில ஒட்டியிருக்கு, இதனால அவருக்கு தொற்று நோய் வந்தா கடவுளே உனக்கு கண்ணில்லையா எனக்கு கருணை காட்ட மாட்டியா” என அழுது புலம்ப மீண்டும் அனைவரின் அக்னி பார்வையில் சுடப்பட்டான் கொம்பன். அவனால் அவர்களின் பார்வையை தாக்கு பிடிக்க இயலாமல் தடுமாறி

  

”அவள் நடிக்கறா” என சொல்ல அவனது தந்தையோ

  

”நாய்களுக்கு ட்ரெயினிங் தர போகனும்னு அவள்ட்ட நீ சொன்னியா இல்லையா”

  

”சொன்னேன்பா அதானே என் வேலை”

  

”போதும்டா நாய்களோட பழகி பழகி உன் பேச்சு மாறிடுச்சி, நாய் மாதிரியே குலைக்கற”

  

”எது நானா நாய் போல குலைக்கறனா இல்லைப்பா” என சொல்ல அவனது தந்தையோ

  

”போதும்டா போதும் நீ் வேலைக்கு போனது, நாய்களோட பழகாத, முன்ன போல இப்ப கிடையாது, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி உன்னை நம்பி ஒருத்தி வந்திருக்கா, நாய்களுக்கு ட்ரெயினிங் கொடுக்கறப்ப ஏதாவது நாய் உன்னை கடிச்சிட்டா என்னாகிறது”

  

”அப்படி ஏதும் நடக்காதுப்பா”

  

”ஒண்ணும் தேவையில்லை, அந்த நாய்களை விலைக்கு வாங்க வந்தவன்கிட்டயே எல்லாத்தையும் கொடுத்துடு“

  

”ஆனா அப்பா நான் சந்நியாசியா போனாதானே நாய்களை விக்கனும்னு நினைச்சி ஆளை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.