(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அப்பா அம்மாதான் உண்மையான கடவுள், கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளை கஷ்டப்படுத்திட்டு சந்நியாசியாகி இறைவனுக்கு தொண்டாற்ற போகனும்னு ஆசைப்படறீங்களே இது தகுமா, கடவுள் கூட இதுக்கு ஒத்துக்க மாட்டாரு வேணா கடவுளை கேட்டுப்பாருங்க”

  

”கடவுளை கேட்கறதா எப்படி”

  

”முடியாதுல்ல அப்ப கண்ணுக்கு முன்னாடி இருக்கற உங்களுக்கு உயிர் தந்த கடவுள்களான உங்க அப்பா அம்மாவ கேளுங்க, உங்களுக்கு நல்லது எது கெட்டது எதுன்னு சொல்வாங்க” என சொல்ல கொம்பனின் பார்வை தாய் தகப்பன் மீது விழ அவர்களோ கண்கள் கலங்கி நின்றிருக்க அந்த கண்ணீர் அவனை தீயாய் சுட்டது

  

”அழாதீங்க எனக்கு கஷ்டமாயிருக்கு”

  

”அப்படின்னா எங்களை கஷ்டப்படுத்தாம இரு, நாங்க சொல்றதை செய்”

  

”என்ன செய்யனும்”

  

“உன் மாமனாருக்கு வயசாயிடுச்சி, இதுக்கு மேல அவரால வேலை செய்ய முடியாது, ஓய்வெடுக்கட்டும் நீ அவருக்கு துணையா இருந்து அவங்களோட சொத்துக்களை பார்த்துக்க”

  

“அதுக்கு நம்ம சொத்துக்களையே பார்க்கலாமே”

  

”நம்ம சொத்துக்களை பார்த்துக்க, நான் இருக்கேன் ஆனா, இங்க அப்படியில்லை நீயும் பார்த்துக்கலைன்னா, என் மருமகளா எல்லாத்தையும் பார்த்துக்குவா இந்த வீட்ல  இருக்கறவரைக்கும் நீ இந்த வீட்டு பையனாதான் இருக்கனும், இந்த வீட்டு மருமகனா யோசி எதுவுமே தப்பில்லை கொம்பா” என்ற தந்தையின் உருக்கமான பேச்சு அவனை சாய்த்தது. தாய் ஏதும் பேசவில்லை ஆனாலும் அவரின் கண்ணீர் ஆயிரம் வார்த்தைகளை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.