”ஏன்டா உனக்கென்ன இதுல பிரச்சனை” என்றார் கொம்பனின் தாயார்
”இந்த பணத்தை கொடுத்தா அது வரதட்சணை போல ஆயிடும்”
”அட என்னடா உளர்ற”
“ஆமாம்”
”நீ சும்மாயிரு உனக்கு ஒண்ணும் தெரியாது”
”இல்லை நானே பணம் சம்பாதிச்சி தர்றேன், நீங்க கிளம்புங்க போங்க வீட்டுக்கு போங்க” என விடாப்பிடியாக அவர்களை அனுப்பிவிட்டு காவேரியிடம் வந்து நின்றான்
”தேவையில்லாத வேலையை ஏன் செய்ற, தானா வர்ற பணத்தை ஏன் வேணாம்ங்கற”
“உனக்கென்ன பணம்தானே வேணும் நானே எப்படியாவது சம்பாதிக்கிறேன் போதுமா”
”எப்படி சம்பாதிப்ப” என கேட்க அந்நேரம் அவனிடம் பதில் இல்லை மௌனமானான்
”நீ எதுக்கும் லாயக்கில்லை என்னவோ போ” என அலுப்பாகச் சொல்ல அவனுக்கு கடும்கோபம் வந்தாலும் என்ன செய்வது என தெரியாமல் திகைத்தான்.
அன்று இரவு முழுவதும் உண்ணாமலும் உறங்காமலும் கொம்பனும் கணக்குப்பிள்ளையும் எப்படி 20 லட்சத்தை சம்பாதிப்பது என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். பொழுது விடிந்தும் அவர்களுக்கு எந்த உபாயமும் தோண்றவில்லை. காவேரியே காபி என கத்த அதைக்கேட்ட பின்புதான் பொழுது விடிந்ததையே உணர்ந்தான் கொம்பன்
”இரு கொண்டு வரேன்” என அலுப்பாக சொல்லிவிட்டு காபி போட்டுக் கொண்டு வந்து அவள் முன் நின்றான்