“உன் பொண்டாட்டி எங்ககிட்ட வந்து நியாயம் கேட்டா, அவளுக்கு வேண்டிய நியாயத்தை வழங்கவே நாங்க இங்க வந்தோம், நியாயப்படி இனிமேல நீ ஊர்க்காரங்களுக்கு உதவி செய்யக்கூடாது, அடிதடியில இறங்கக்கூடாது”
”ஆனா அப்பா அவள் பேச்செல்லாம் ஒரு பேச்சா அதை கேட்டுட்டு வந்து இப்படி நடந்துக்கறீங்க ஊர்க்கு ஒரு பிரச்சனைன்னா அதை பார்க்காம போனா நான்லாம் ஒரு மனுஷனாப்பா”
”போதும்பா நீ எங்களுக்கு புள்ளையாவும் உன் பொண்டாட்டிக்கு நல்ல புருஷனாவும் இருந்தா போதும், ஊர் பிரச்சனையை தீர்க்க ஆளுங்க இருக்காங்க ஊர் தலைவர் இருக்காரு, அரசாங்க அதிகாரிங்க இருக்காங்க, போலீஸ் இருக்கு கோர்ட் இருக்கு அவங்க மூலமா பிரச்சனை தீரட்டும், நீ இனிமேல எதுலயும் தலையிடாத”
”அப்பா நீங்க சொல்ற ஆட்கள் எல்லாம் பிரச்சனையை சரிசெய்ய ரொம்ப நாள் எடுத்துக்குவாங்க, அதுவரைக்கும் இவங்க கஷ்டப்படனுமா விடுங்கப்பா தகராறு செய்றவங்களை இரண்டு அடி கொடுத்தா போச்சி, அவங்க ஓடிடுவானுங்க பிரச்சனை முடிஞ்சிடும் அவ்ளோதான்”
”போதும்பா போதும் இதுவரைக்கும் நீ என்ன செய்தாலும் நாங்க அமைதியா இருந்தோம்னா உன் மேல நாங்க வைச்ச கண்மூடித்தனமா பாசத்தாலதான், ஆனா இப்ப அப்படியில்லை உன்னை நம்பி உன் பொண்டாட்டியிருக்கா, உன் வாழ்க்கையோட அவள் வாழ்க்கையும் இணைஞ்சிருக்கு, உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவளுக்கும் பாதிக்கும் அவளோட வாழப்பாரு, அதை விட்டுட்டு இந்த ஊர்க்காரங்க பின்னாடி போகாத, இவங்களாலதானே பாவம் அவளோட வாழ்க்கை பாதிச்சது, அவளுக்கு நடந்த அநீதிக்காகதானே நீ அவளை கல்யாணம் செய்துக்கிட்ட, அதையெல்லாம் மறக்கலாமா ஊர்க்கு ஒரு பிரச்சனைன்னா உடனே ஓடறியே உனக்குன்னு ஒரு பிரச்சனை வந்தப்ப யார் வந்தாங்க சொல்லு”
”அதுக்காக நடக்கற அநியாயத்தை பார்த்துக்கிட்டு கல்லு போல இருக்க சொல்றீங்களா அது என்னால முடியாதும்மா”