(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

கொண்டு வாங்க” என கட்டளையிட அது யார் காதிற்கும் சென்று சேரவில்லை. உதயமூர்த்தி நொந்துப் போய் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

  

கோவலனும் கண்ணகியைப் பார்த்து இளப்பமாக சிரித்துவிட்டு

  

”உன்னால ஒண்ணும் செய்ய முடியாது முதல் நாளே மொக்கை வாங்கப் போற பாரு” என சொல்லிவிட்டு அவனும் ஒரு இருக்கையில் அமர்ந்தான். அவளோ அவன் சொன்னதைக் கேட்டு சிரித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து பாடினாள் தமிழ்தாய் வாழ்த்தை

  

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

  

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

  

  

என சத்தமாக பாடிக் கொண்டே வர மாணவர்களிடம் இருந்த சத்தம் குறைந்தது.

  

அந்த பாடலைக் கேட்டதும் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்றார்கள் ஆசிரியர்களும் எழுந்து நிற்க உதயமூர்த்தியும் எழுந்தார் அனைவரும் எழுந்ததும் கோவலனுக்கு புரியவில்லை தானாக எழுந்து நின்றுக் கொண்டான்.

  

எது எப்படியோ அவள் தமிழ்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் அந்த இடமே அமைதியானது

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.