சொல்லுங்க சார்” என வேண்டுமென்றே சார் என்பதை அடிக்கடி போட்டு பேச அவனோ கடுப்பாகி
”போதும் நிறுத்து மாதவி இனிமேல நீ என்னை சார்ன்னு கூப்பிடாத, அதை கேட்கவே எனக்கு கஷ்டமாயிருக்கு” என சொல்ல அவளோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு
”வேற எப்படி சார் உங்களை கூப்பிடறது”
”ம் பேரை வைச்சி கூப்பிடு“
”பேரா அய்யோ சார் நான் எப்படி நானே உங்ககிட்ட வேலை செய்றவ, முதலாளி பேரை எப்படி பேரை வைச்சி கூப்பிடறது”
”சொல்றது நான்தானே கூப்பிட்டுத்தொலையேன் உனக்கென்ன வாயா வலிக்க போகுது”
”ஓகே ஆனா இங்க மட்டுமா இல்லை எல்லா இடத்திலயுமா” என கேட்க அவள் சொல்ல வருவது புரிந்துக் கொண்டவன்
”இந்த ரூம்ல என்கிட்ட இருக்கறப்ப மட்டும் என் பேர் வைச்சி கூப்பிடு மத்த இடத்தில பேச வேண்டிய நிலைமை வராது புரியுதா”
”ஓகே கோவலன்“ என்றாள் சட்டென அதைக்கேட்டு முதலில் அதிர்ந்தான் பின் பெருமூச்சுவிட்டு
”என் பேரு இப்பதான் எனக்கே அழகா தெரியுது மாதவி”
”அப்படியா கோவலன் என்னை எதுக்காக வரசொன்னீங்ன்னு சொல்லவேயில்லையே”
”மெயில் வந்தது நீ செய்த ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆயிடுச்சி அதை சொல்ல கூப்பிட்டேன்“
”கோவலன் எனக்கும் அந்த மெயில் வந்தது, எனக்கு மட்டுமில்லை என் டீம் மெம்பர்கள்