(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”சே இவங்களுக்கு வேற வேலையே இல்லை, இப்படியே பொழுதுக்கும் செய்தா வேலையை யார் முடிக்கறது, நான் போய் அவங்களை பிரிச்சி விடறேன்” என கணக்குபிள்ளை சொல்ல அதற்கு சண்முகமோ

  

”வேணாம் அவங்க எப்படியோ போகட்டும் நாம போய் தோப்பு வேலைகளை பார்க்கலாம்”

  

”இவங்களை இப்படியே விட்டு போனா  கொஞ்ச நேரத்தில சண்டை போட்டுக்குவாங்க”

  

”போட்டுக்கட்டும் விடு”

  

”என்ன இப்படி சொல்றீங்க”

  

”புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிச்சிக்கறதும் பிடிச்சிக்கறதும் சகஜம்தான் யார் யார்க்கு நரகம் காட்டறாங்க சொர்க்கம் காட்டறாங்கன்னு தெரியலை, அவங்களே ஒரு முடிவுக்கு வரட்டும் அதுக்குள்ள நாமளே வேலைகளை முடிச்சிட்டு வந்துடலாம் வா வா” என அழைக்க கணக்குபிள்ளையும் சரியென தலையாட்டி அவருடன் வீட்டைவிட்டு வெளியேறி தோப்புக்குச் சென்றான்

  

இங்கோ இதுவரை 20 முறையாவது காவேரி கொம்பனை கட்டிபிடித்திருப்பாள், அவனோ ஒரு நொடி கூட மயங்காமல் உறுதியாக இருந்தான், அவளுக்கே அலுப்பாக இருந்தது. வெறுப்பே வந்தது அவளது ஏமாற்றத்தைக்கண்ட கொம்பன் வெற்றி சிரிப்பு சிரிக்க அவளுக்கு கோபம் வந்தது.

  

இதுவரை இயந்திரத்தனமாக அவனை கட்டிப்பிடித்தாள், இம்முறை அவனது உடலை தழுவியபடியே மென்மையாக கட்டியணைத்துக் கொள்ள ஒரு நொடி அவன் தடுமாறினான். கண்கள் மூடினான். அவனது கட்டுப்பாடு கட்டு அவிழ்ந்து ஓடிக் கொண்டிருந்தது கூட தெரியாமல் கிறக்கத்தில் நின்றான். அவளோ மெதுவாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அவன் சொக்கிப் போய் இருப்பதைக்கண்டு சந்தோஷப்பட்டு உடனே அவனை விட்டு விலகி

  

”ஏஏஏஏ நான்தான் ஜெயிச்சேன் நான்தான் ஜெயிச்சேன்” என கூச்சலிட அவனோ அவளை

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.